Ajith : துணிவு படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் அஜித்குமார் தனது 62 வது திரைப்படமாக விடாமுயற்சி திரைப்படத்தில் நடிப்பதாக அவரின் பிறந்தநாளை முன்னிட்டு கூறப்பட்டது. லைகா நிறுவனம் தயாரிக்க மகிழ் திருமேனி இயக்க உள்ளார் அனிருத் படத்திற்கு இசையமைப்பாளர் என கூறப்பட்டது.
அதன்பிறகு விடாமுயற்சி படத்திலிருந்து எந்த ஒரு அப்டேட்டும் பெரிய வராமல் இருந்து வருகின்றன. ஆனால் பட குழு சைலண்டாக வேலையை பார்த்து வருகிறது. இயக்குனர் மகிழ் திருமேனி ஒரு பக்கம் நடிகர், நடிகைகளை தேர்வு செய்து விட்டாராம் இன்னொரு பக்கம் மொத்த திரை கதையையும் பக்காவாக எழுதி வருகிறாராம்.
இந்த கதைக்கு அஜித் உடல் எடையை குறைக்க வேண்டும் என மகிழ் திருமேனி சொல்லிவிட்டாராம்.. உடனே அஜித் பைக் டூர் போவதை நிப்பாட்டி விட்டு படத்திற்காக அதிரடியாக உடல் எடையை குறைத்து வருகிறார் தொடர்ந்து அவர் ஸ்லிம்மாக இருக்கும் புகைப்படங்கள் தொடர்ந்து இணையதள பக்கத்தில் வெளிவந்து கொண்டே இருக்கின்றன படம் தொடங்குவதற்குள் இன்னும் அஜித் வெயிட் லாஸ் பண்ணுவார் என கூறப்படுகிறது.
விடாமுயற்சி படம் ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல் கட்ட சூட்டிங் தொடங்கப்படும் என கூறப்படுகிறது இதற்காக மகிழ் திருமேனி தனது டீமுடன் அனைத்து வேலைகளையும் முன்புறமாக செய்து வருகிறாராம். படத்தை அதிகபட்சம் மூன்று ஷெடுல்களில் முடிக்க வேண்டும் அதில் முதல் இரண்டு செட்டில் அஜித்திற்கான போசன் அனைத்தையும் முடித்து.
அவரை ஃப்ரீயாக்கி விட வேண்டும் என இயக்குனர் முடிவெடுத்து உள்ளார். ஏனென்றால் அஜித் விடாமுயற்சி படத்தை தொடர்ந்து பைக்கில் வேல்ட டூர் செல்ல திட்டமிட்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. விடாமுயற்சி திரைப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் வெளியாகும் எனவும் தகவல்கள் சொல்லப்படுகிறது.