தமிழ் சினிமாவில் நேர்கொண்ட பார்வை, வலிமை தற்போது துணிவு என தொடர்ந்து வெற்றிகளுக்கு பிறகு தற்பொழுது அஜித் தன்னுடைய 62வது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். துணிவு திரைப்படம் பொங்கல் பண்டிகை முன்னிட்டு கடந்த ஜனவரி மாதம் 10ஆம் தேதி வெளியான நிலையில் ரசிகர்களின் வரவேற்புடன் தற்பொழுது வரையிலும் மிகவும் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி வருகிறது.
இதனை அடுத்து துணிவு திரைப்படம் பிப்ரவரி 8ஆம் தேதி முதல் நெட்ஃப்லிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது . ஓடிடி தளத்திலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருவதாக கூறப்படுகிறது இப்படிப்பட்ட நிலையில் அஜித் அவர்கள் லண்டன் சுற்றுலா பயணம் சென்றிருந்த நிலையில் பிறகு போர்ச்சுக்கல் நாட்டில் சுற்றுப்பயணத்தை மேற்கண்டார்.
அங்கு ஷாலினி தன்னுடைய கணவர் அஜித்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். இப்படிப்பட்ட நிலையில் போர்ச்சுகல் பயணத்தை முடித்துவிட்டு ஐக்கிய ராஜ்யத்தில் உள்ள ஸ்காட்லாந்த் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
இவ்வாறு சுற்றுலாவை மேற்கொண்ட ஆஜித் தற்பொழுது அனைத்தையும் முடித்துவிட்டு நேற்று காலை சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் ஊழியர்கள், ரசிகர்கள் கூடியிருந்த நிலையில் பலரும் அஜித்துடன் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டனர். விமான நிலையத்தில் இருந்து வெளியேறும் பொழுது நடிகர் அஜித் நடந்து வருகிறார்.
அந்த நேரத்தில் சிறுவன் ஒருவர் துணிவு படத்தில் அஜித் அணிந்திருந்த உடை போல் அணிந்து இருந்த நிலையில் அஜித்துடன் சேர்ந்து நின்று புகைப்படம் எடுத்துக் கொள்ள முயற்சித்தார். அந்த சிறுவன் வருவதைப் பார்த்த அஜித் அந்த சிறுவனின் தோளில் கையை போட்டு பேசிக்கொண்டே புகைப்படம் எடுத்துக் கொண்டார் அந்த வீடியோக்கள் தற்பொழுது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
Kutty Thala Fan in Dark Devil constume
😘😘😘😘#AK62 #AjithKumar pic.twitter.com/bqLX9E3vZu— Billa Prabha Pollachi (@PrabhaAjithFan) February 16, 2023