விஜய்க்கு பயத்தை காட்டிய அஜித்.. பக்காவா ஸ்கெட்ச் போட்டு மிரட்டும் துணிவு படக்குழு.!

ajith
ajith

ஹச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் துணிவு. இந்த படத்தை போனி கபூர் மிக பிரம்மாண்ட பொருள் செலவில் தயாரித்திருக்கிறார் ஜிப்ரான் இந்த படத்திற்கு சூப்பராக இசையமைத்திருக்கிறார். துணிவு படம் முழுக்க முழுக்க பணத்தை மையமாக வைத்து கதை உருவாகி உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தில் அஜித் நெகட்டிவ் ரோலில் நடிக்கிறார் அவருடன் கைகோர்த்து மலையாள நடிகை மஞ்சு வாரியர், வீரா, சமுத்திரக்கனி, யோகி பாபு என பல நட்சத்திரங்கள் துணிவு படத்தில் நடித்திருக்கிறனர் படம் வருகின்ற பொங்கலை குறிவைத்து ரிலீஸ் ஆக உள்ளது. அதற்கு முன்பாக ரசிகர்களை கவர்ந்திழுக்க அடுத்தடுத்த அப்டேட்டுகளை கொடுத்து வருகிறது.

இது அஜித் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்துள்ளது பொதுவாக அஜித் ரசிகர்கள் தான் அப்டேட்டை கேட்டு காத்து கிடப்பார்கள் ஆனால் தற்பொழுது அஜித் ரசிகர்கள் கேட்பதற்கு முன்பாகவே படக்குழுவே தானாக வந்து அப்டேட்டுகளை கொடுத்து வருவது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது அதற்கு காரணம் அஜித் படக்குழுவுக்கு முழு சுதந்திரம் கொடுத்து விட்டாராம்.

என்னை மட்டும் எதற்கும் கூப்பிடாதீர்கள் நீங்கள் பிரமோஷன் பண்ணுங்கள் எது வேண்டுமானாலும் பண்ணுங்கள் என சொல்லிவிட்டாராம் இதனால் படக்குழு செம குஷியில் அடுத்தடுத்த அப்டேட்டுகளை கொடுத்து வருகிறது கடைசியாக வெளிவந்த ட்ரைலர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் தேதியை மட்டும் உறுதிப்படுத்தவில்லை காரணம் என்னவென்றால் விஜயின் படம் எப்பொழுது வெளிவருகிறது என்று தெரிந்து கொண்டு  அதற்கு முந்தைய நாளே துணிவு திரைப்படத்தை ரிலீஸ் செய்ய அஜித் செம்ம பிளான் போட்டு இருக்கிறார் என கூறப்படுகிறது அதனால் தான் ட்ரைலரில் கூட தேதியை சொல்லவில்லை.