நடிகர் அஜித்குமாருக்கு ஒருவரை பிடித்து விட்டால் அவருடன் தொடர்ந்து படம் பண்ணுவதை தனது வழக்கமாக வைத்திருக்கிறார் அந்த வகையில் சரண், சிறுத்தை சிவா ஆகியோர்களை தொடர்ந்து இளம் இயக்குனர் ஹச். வினோத்துடன் தொடர்ந்து படம் பண்ணி வருகிறார். அந்த வகையில் இப்போ வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் துணிவு.
இந்த படம் முழுக்க முழுக்க பணத்தை மையம்படுத்தி உருவாகியுள்ளதாம். மேலும் இந்த திரைப்படத்தில் அஜித் நெகட்டிவ் ரோலில் செம்ம மாஸாக சீன்னாக நடித்துள்ளாராம்.. அவருடன் இணைந்து மலையாள நடிகை மஞ்சு வாரியர், இளம் நடிகர் வீரா, சமுத்திரக்கனி, யோகி பாபு, மகாநதி சங்கர், அஜய், ஜான் கொக்கன் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து உள்ளனர்.
துணிவு திரைப்படம் அடுத்த வருடம் பொங்கலை முன்னிட்டு ரிலீஸ் ஆகிறது. அடுத்த நாளே விஜயின் வாரிசு திரைப்படம் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கின்ற நிலையில் துணிவு திரைப்படத்திலிருந்து ஒரு தகவல் கசிந்து உள்ளது அதாவது படம் முழுக்க முழுக்க ஆயோகியர்களின் ஆட்டம் என்பதால்..
இந்த படத்தில் ஆக்சன் காட்சிகள் அதிகம்.. அஜித்திற்கு எப்படி ஆக்ஷன் காட்சிகள் அதிகமோ.. அதே போல இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துயுள்ள மஞ்சு வாரியருக்கும் அதிக ஸ்டன்ட் காட்சிகள் கொடுக்கப்பட்டுள்ளதாம். அவர் ஒவ்வொரு காட்சிகளும் சும்மா மிரட்டலாக நடித்ததால் படக்குழுவே ஆச்சரியப்பட்டு போனதாம்.
நடிகர் அஜித்தும் வியந்து போய் பாராட்டியதோடு மட்டுமல்லாமல் மலையாள நடிகை மஞ்சு வாரியருக்கு செல்ல பெயரையும் ஒன்றை வைத்துள்ளார் ஆம் படப்பிடிப்பு தொடங்கியதில் இருந்து முடியும் வரை மஞ்சு வாரியரை அஜித் செல்லமாக “ரிவால்வர் ரீட்டா” என கூப்பிட்டு வந்தாராம். இந்த தகவல் தான் தற்பொழுது தல ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.