துணிவு படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் அஜித்குமார் ஏகே 62 திரைப்படத்தில் நடிக்க அதிகம் ஆர்வம் காட்டினார். இந்த படத்தைமுதலில் லைகா நிறுவனம் தயாரிக்க இளம் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாக தகவல்கள் எல்லாம் வெளிவந்தன ஆனால் விக்னேஷ் சிவன் சொன்ன கதை..
லைகா நிறுவனம் மற்றும் நடிகர் அஜித்துக்கு சுத்தமாக பிடிக்காததால் அவரை வெளியேற்றிவிட்டு மகிழ் திருமேனியை ஏகே 62 திரைப்படத்திற்கு இயக்குனராக போட்டு உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என சொல்லப்படுகிறது. அதற்குள்ளே இயக்குனர் மகிழ் திருமேனி தனது ட்விட்டர் பக்கத்தில் லைகா மற்றும் அஜித் படத்தில் இணைய இருப்பதாக கூறியிருக்கிறார்.
இது ஒருபக்கம் இருக்க.. மகிழ் திருமேனி அஜித்தை சந்தித்து இரண்டு கதைகளை கூறியிருக்கிறார். அதில் ஒன்னு குடும்ப செண்டிமெண்ட் கலந்த ஆக்சன் படம், மற்றொன்று முழுக்க முழுக்க திரில்லர் கதையை சொல்லி இருக்கிறார் இரண்டு கதையுமே அஜித்திற்கு ரொம்ப பிடித்து போய் உள்ளதால் இரண்டிலுமே நடிக்கிறேன் என வாக்கு கொடுத்து இருக்கிறாராம்.
இந்த இரண்டு திரைப்படத்தையுமே லைகா நிறுவனம் தான் மிக பிரம்மாண்ட பட்சத்தில் தயாரிக்க இருக்கிறது ஆனால் முதலில் எந்த படத்தில் அஜித் நடிக்கிறார் என்பது இதுவரை சொல்லப்படவில்லை.. ஆனால் ஒரு விஷயம் மட்டும் தெள்ளத்தெளிவாகியுள்ளது அதாவது அஜித் சிறுத்தை சிவா, ஹச். வினோத்துடன் எப்படி தொடர்ந்து படம் பண்ணினாரோ..
அதேபோல இயக்குனர் மகிழ் திருமேனி உடனும் அடுத்தடுத்து படம் பண்ண இருக்கிறார். மகிழ்திருமேனியின் வேலைகள் மற்றும் ஏகே 62 படத்திற்கு தீவிரம் காட்டுவது அஜித்திற்கு ரொம்ப பிடித்து போனதால் AK 63 படத்தையும் அஜித், மகிழ் திருமேனி தான் கொடுக்க போகிறார் என சொல்லப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்..