அண்மை காலமாக நடிகர் அஜித் ஒரு இயக்குனருடன் இரண்டு, மூன்று படங்களில் பணியாற்றி வருகிறார். கடைசியாக அஜித் நடிப்பில் வெளிவந்த துணிவு திரைப்படத்தை இயக்குனர் ஹச் வினோத் இயக்கியிருந்தார். இதற்கு முன்பு நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களை தொடர்ந்து அஜித் மற்றும் ஹெச் வினோத் கூட்டணியில் உருவான மூன்றாவது திரைப்படமாக இது உருவானது.
இப்படி சென்று கொண்டிருந்த அஜித் திடீரென அடுத்த படமான AK 62 படத்திற்கு இளம் இயக்குனர் விக்னேஷ் சிவனை தேர்வு செய்துள்ளார். லைகா தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித்தின் 62 படம் உருவாக உள்ளது என ஏற்கனவே அறிவிப்பு வெளியாகியது. ஆனால் தற்போது விக்னேஷ் சிவன் சொன்ன கதை..
தயாரிப்பு நிறுவனத்திற்கு பிடிக்காத காரணத்தினால் வேறு ஒரு இயக்குனரை வைத்து ஏகே 62 படத்தை இயக்க உள்ளனர் அதன்படி மகிழ் திருமேனி தான் அஜித்தின் அடுத்த படத்தை இயக்க உள்ளார் எனவும் கூறப்படுகின்றனர் இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் அஜித் துணிவு படத்தின் வெற்றியை தொடர்ந்து வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
அதன்படி தற்போது அவர் ஸ்காட்லாந்தில் இருக்கிறார். அதை தெரிந்துகொண்ட அஜித்தின் ரசிகர் ஒருவர் அவரை எப்படியாவது சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என அவர் இருக்கும் இடத்தை தேடி பிடித்து சென்று பேசியுள்ளார். அப்போது ஒரு காபி ஷாப்பில் அஜித் தனியாக இருந்துள்ளார். அந்த ரசிகர்கள் தன்னிடம் பேச முயற்சிப்பதை தெரிந்து கொண்ட அஜித் அவர்களை கூப்பிட்டு புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார்.
அப்போது அந்த ரசிகர்கள் தயக்கத்துடன் அஜித்திடம் ஏகே 62 அப்டேட் குறித்து கேட்டுள்ளனர் அதற்கு அஜித் சிரித்தபடியே பதில் அளித்துள்ளார். அவர் கூறியது தற்போது எனக்கு கொஞ்சம் பிரேக் வேண்டும் என சொல்லிவிட்டு பின்பு அந்த ரசிகர்களிடம் சகஜமாக பேசி புகைப்படத்தை எடுத்து விட்டு அனுப்பி வைத்துள்ளார். இந்த செய்தியை தற்போது அஜித் ரசிகர்கள் இணையதள பக்கத்தில் வைரலாகி வருகின்றனர்.