சினிமா உலகில் இருக்கும் நடிகர்கள் போட்டி போடுவது மிக சகஜமும் ஆனால் ஒரு சில நடிகர்கள் யார் பெரிய ஹீரோ என தெரிந்து கொள்ள தொடர்ந்து போட்டி போடுகின்றனர் அந்த வகையில் ரஜினி, கமலை தொடர்ந்து அஜித், விஜய் பல தடவை நேருக்கு நேர் மோதி உள்ளனர் இதில் ஆரம்பத்தில் விஜய் கை ஓங்கி இருந்தாலும்..
கடந்த சில வருடங்களாக அஜித்தின் கை தான் ஆதிக்கம் செலுத்தியுள்ளது. இந்த நிலையில் கடந்த பொங்கலை முன்னிட்டு வெளியான அஜித்தின் துணிவு, விஜயின் வாரிசு படங்கள் நேருக்கு நேர் மோதின இரண்டு திரைப்படங்களுமே வெவ்வேறு கதைகளும்.. அஜித்தின் துணிவு திரைப்படம்..
சமூக அக்கறை உள்ள ஒரு முழு ஆக்க்ஷன் படமாக அமைந்தது மறுபக்கம் விஜயின் வாரிசு திரைப்படம் முழுக்க முழுக்க குடும்ப செண்டிமெண்ட், காமெடியான படமாக இருந்தது. இந்த இரண்டு படங்களும் மக்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று தொடர்ந்து வசூலில் வாரி குவிக்கின்றன. ஏற்கனவே இரண்டு திரைப்படங்களும் உலக அளவில் 200 கோடிக்கு மேல் வசூல் அள்ளியது.
தொடர்ந்து இந்த படத்தின் வசூல் குவிந்த வண்ணமே இருக்கின்றன இப்படி இருக்கின்ற நிலையில் கேரளாவில் இரண்டு திரைப்படங்களும் எவ்வளவு வசூல் செய்துள்ளது யார் கையை அங்கு ஓங்கி இருக்கிறது என்பது குறித்து தகவல் வெளிவந்துள்ளது. கேரளாவில் எப்பொழுதுமே விஜய் படம் அசால்ட்டாக 10 கோடி அள்ளிவிடும் ..
ஆனால் வாரிசு திரைப்படம் கேரளாவில் படுதோல்வியை சந்தித்துள்ளது என்கின்றனர் மறுபக்கம் அஜித்தின் துணிவு திரைப்படம் கேரளாவில் நல்ல லாபத்தை அள்ளி மாஸ் காட்டி வருகிறதாம்.. இந்த தகவல் தற்பொழுது தளபதி விஜய்க்கு தலைவலியை கொடுத்து உள்ளது. தொடர்ந்து விஜயின் படங்கள் கேரளாவில் தொடர்ந்து வசூல் ரீதியாக பாதிக்கப்பட்டு வருகிறது இப்படியே போனால் அங்கு விஜயின் மார்க்கெட் குறையும் என கூறப்படுகிறது.