கோடான கோடி ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து வைத்துள்ளவர் நடிகர் அஜித்குமார் இவர் வலிமை திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தனது 61வது திரைப்படமான துணிவு திரைப்படத்தில் வெற்றிகரமாக நடித்து முடித்துள்ளார் இந்த படம் அடுத்த வருடம் பொங்கலை முன்னிட்டு கோலாகலமாக ரிலீஸ் ஆக இருக்கிறது இந்த திரைப்படமும்..
மிகப்பெரிய ஒரு வெற்றி திரைப்படமாக மாறும் என சொல்லி வருகின்றனர். இந்த திரைப்படம் முழுக்க முழுக்க பேங்க் ராபரியை மையமாக வைத்து உருவாகி உள்ளது. துணிவு திரைப்படத்தில் நடிகர் அஜித் நெகட்டிவ் ரோலில் சூப்பராக நடித்துள்ளதாக கூறப்படுகிறது. அஜித்துடன் கைகோர்த்து இந்த படத்தில் மலையாளம் நடிகை மஞ்சு வாரியார், இளம் நடிகர் வீரா, சமுத்திரகனி, யோகி பாபு, மகாநதி சங்கர், அஜய்..
ஜான் கொக்கன் மற்றும் பிக் பாஸ் பிரபலங்களான சிபி, அமீர் போன்றவர்களும் நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. படம் ரிலீசுக்கு முன்பு ரசிகர்களை கவர்ந்து இழுக்க படக்குழு அடுத்தடுத்து அப்டேட்டுகளை கொடுக்க இருக்கிறது அதில் முதலாவதாக சில்லா சில்லா பாடல் தான் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இது ஒரு பக்கம் இருக்க மறுபாக்கம் நடிகர் அஜித்குமார் அடுத்ததாக இளம் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் முதல் முறையாக கூட்டணி அமைத்து தனது 62வது படத்தில் நடிக்க இருக்கிறார் இந்த நிலையில் நடிகர் அஜித்குமாரின் புதிய புகைப்படம் ஒன்று இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது.
ஆம் துணிவு திரைப்படத்திற்காக தாடி மீசை எல்லாம் வைத்திருந்த அஜித் தற்பொழுது படப்பிடிப்பு முடிந்து முற்றிலுமாக தனது கெட்டப்பை சேஞ்ச் செய்து புதிய அவதாரத்தில் இருக்கிறார் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போகின்றனர் இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப்படத்தை..