தற்பொழுதெல்லாம் சினிமாவில் நடித்து வரும் நடிகர் பல கோடி சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது இதன் காரணத்தினால் நடிகைகள் வாழ்க்கையில் பெரிதாக எந்த பிரச்சனையும் இருக்காது என பலரும் நினைத்து வருகிறார்கள் ஆனால் சொல்ல முடியாத அளவிற்கு பிரச்சனை இருந்து வரும் பிரபலங்கள் பலரும் உள்ளார்கள்.
அந்த வகையில் மலையாள திரை உலகில் லேடிஸ் சூப்பர் ஸ்டாராக வளம் வந்து கொண்டிருக்கும் நடிகை மஞ்சு வாரியார் கோலிவுட் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த அசுரன் திரைப்படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகி பிறகு தற்பொழுது விஜயுடன் இணைந்து துணிவு திரைப்படத்தில் நடித்து வருகிறார் இவர் நடிகை மட்டுமல்லாமல் கிளாசிக் டான்சர், பாடகி, தயாரிப்பாளர் என பல திறமைகளை வைத்துள்ளார்.
மிகவும் முக்கியமாக தன்னால் முடிந்த சமூக சேவைகளையும் செய்து வரும் இவர் தன்னுடைய 17 வயதில் சினிமாவிற்கு அறிமுகமானார். குறுகிய காலத்தில் மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக மாறிய இவர் நடிகர் திலீபை காதலித்து 20 வயதிலேயே திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு சினிமாவில் நடிக்காமல் இருந்து வந்த இவர் 15 ஆண்டுகள் சினிமா துறையில் தலை காட்டாமல் இருந்து வந்தார்.
குடும்பம், குழந்தை, கணவர் என வாழ்ந்து வந்த இவருக்கு தன்னுடைய நெருங்கிய தோழியின் மூலம் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அதாவது இவருடைய தோழி நடிகை காவியா மாதவன் விழிப்புடன் நெருங்கி பழகி இருக்கிறார் அதனை கேள்விப்பட்ட மஞ்சு வாரியார் தன்னுடைய கணவரை விட்டு பிரியும் அளவிற்கு முடிவெடுத்து இருக்கிறார். எனவே இவர்கள் கடந்த 2015ஆம் ஆண்டு சட்டரீதியாக விவாகரத்து பெற்று பிரிந்தார்கள்.
இவ்வாறு கணவரை விட்டு பிரிந்த நிலையில் இந்த சோகத்தில் இருந்து வந்த மஞ்சுவாரியாருக்கு மேலும் தன்னுடைய மகளால் மன உளைச்சல் ஏற்பட்டு உள்ளது அதாவது இந்த தம்பதியினர்களின் ஒரே மகள் மீனாட்சி அவர் தன் அப்பாவுடன் இருக்க விரும்புகிறேன் எனக்கூறி பலரையும் அதிர்ச்சியடைய வைத்தார்.
இவ்வாறு தன்னுடைய மகளே தன்னுடன் இருக்க முடியாது எனக் கூறியதால் இவரை பலரும் விமர்சித்து வந்தார்கள். இப்படிப்பட்ட நிலையில் மீண்டும் மஞ்சு வாரியார் How Old are you என்ற திரைப்படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். இவ்வாறு லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் தற்பொழுது உள்ள பல இளம் பெண்களுக்கு மாடலாக திகழ்ந்து வருகிறார்.