சமீப காலங்களாக சீரியல் நடிகைகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது அதோடு மட்டுமல்லாமல் தாங்கள் அறிமுகமாகும் முதல் சீரியலிலேயே பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைந்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொள்கிறார்கள். இவ்வாறு தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைய வேண்டும் என்பதற்காக சோசியல் மீடியாவில் தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இடுவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
இப்படிப்பட்ட நிலையில் தற்போது சன் டிவியில் கயல் சீரியல் நடிகை ஒருவர் கிஸ் மி என போட்டோவை பகிர்ந்து ரசிகர்களிடம் முத்தம் கேட்டுள்ளார் மேலும் இவர் அஜித் உடன் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அது வேறு யாருமில்லை பிரபல சின்னத்திரை நடிகை சைத்ரா ரெட்டி தான். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கல்யாண முதல் காதல் வரை சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானார்.
இதனைத் தொடர்ந்து ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த யாரடி நீ மோகினி சீரியலில் தன்னுடைய வில்லத்தனத்தை காண்பித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார். இந்நிலையில் தற்பொழுது சைத்ரா ரெட்டி சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியல் அறிமுகமான காலகட்டத்தில் இருந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருவதால் தற்பொழுது டிஆர்பி-யில் முன்னணி வகித்து வருகிறது.
இந்த சீரியல் குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக தனியாலாக இருந்து எப்படி அந்த பெண் தினமும் போராடுகிறார் என்பதை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வருகிறது. இந்த வகையில் அந்த பெண்ணாகவே கயல் ரோலில் நடித்து வருகிறார் சைத்ரா ரெட்டி. இதற்கு ஜோடியாக சஞ்சீவ் எழிலரசன் ரோலில் நடித்து வருகிறார். மேலும் சைத்ரா ரெட்டி நடிகர் அஜித்துடன் இணைந்து வலிமை திரைப்படத்தில் லதா என்ற ரோலில் நடித்திருந்தார்.
இவர் வரும் காட்சிகள் குறைவாக இருந்தாலும் இவருடைய நடிப்பிற்காக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் தற்பொழுது இவர் தனது இன்ஸ்டாகிராமில் சாய்ந்து நின்று கொண்டு kiss, kiss me என பதிவு செய்துள்ள புகைப்படத்தை ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.