ரசிகர்களின் ஃபேவரட் நாயகன் அஜித் துணிவு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் வருகின்ற பொங்கலுக்கு ரிலீசாக உள்ளது அதனால் படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் கூடிக் கொண்டே இருக்கிறது. ஹச் வினோத் இயக்கிய துணிவு படம் ஒரு பேங்க் கொள்ளையை மையமாக வைத்து உருவாகி உள்ளது.
தற்போது துணிவு படத்தின் பிரமோஷன் வேலைகள் நடைபெற்று வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து அஜித் அடுத்ததாக லைகா ப்ரொடக்ஷன் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அவரது 62 வது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்திற்கு தேவையான நடிகர் நடிகைகளை இயக்குனர் விக்னேஷ் சிவன் தேர்வு செய்து வருகிறார்
இந்த படத்தின் படப்பிடிப்பு கூடிய விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை தொடர்ந்து அஜித் சில இயக்குனர்களிடம் கதை கேட்டும் வருகிறார். அந்த வகையில் சூரரைப் போற்று திரைப்படத்தை இயக்கி தேசிய விருது பெற்ற சுதா கொங்கரா அஜித்திற்கு ஒரு கதையை கூறி சம்மதம் வாங்கியுள்ளார். கிட்டத்தட்ட இது உறுதியானது போல் தெரிகிறது இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் கூடிய விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இயக்குனர் சுதா கொங்கரா தமிழில் இயக்கிய சூரரைப் போற்று படத்தை தொடர்ந்து ஹிந்தியிலும் இந்த படத்தை ரீமேக் செய்து வருகிறார். மேலும் சூர்யா உடன் இணைந்து மற்றொரு படத்திலும் பணியாற்ற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதைத்தொடர்ந்து விக்ரம் வேதா படத்தை இயக்கிய புஸ்கர் காயத்ரி அஜித்துக்காக ஒரு ஆக்சன் கதையை கூறி இருக்கிறார்
அந்த கதை மிக சுவாரசியமாக இருந்ததால் நிச்சயம் இந்த படத்தை நாம் பண்ணலாம் எனவும் அஜித் உறுதி கொடுத்துள்ளாராம். இப்படி தொடர்ந்து அடுத்தடுத்த இரண்டு பெண் இயக்குனர்களின் படங்களை அஜித் கமிட் செய்தது பலருக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது. ஆனாலும் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளிவரும் வரை பொறுத்து இருந்து பார்ப்போம்..