தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் கார்த்தி இவர் பருத்திவீரன் படத்தின் மூலம் அறிமுகமானார். முதல் படமே இவருக்கு மிகப்பெரிய ஒரு வெற்றி படமாக அமைந்தது மேலும் முதல் படத்திலேயே தனது திறமையை வெளிப்படுத்தியதால் அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் கிடைத்தன. இருப்பினும் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்ததால் சினிமாவில் மிக விரைவிலேயே அவருக்கான ரசிகர்களை உருவாக்கினார்.
மேலும் இவருக்கென ஒரு நிரந்தரமான இடம் தமிழ் சினிமாவில் கிடைத்தது. தொடர்ந்து வெற்றியை ருசித்து ஓடிக் கொண்டிருக்கும் இவர் கடைசியாக நடித்த ஒரு சில திரைப்படங்கள் தோல்வி படங்களாக அமைந்தன. அதிலிருந்து மீண்டு வர நடிகர் கார்த்தி தற்பொழுது பொன்னியின் செல்வன், விருமன், சர்தார் போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்த படங்கள் அனைத்துமே ஒவ்வொன்றாக வெளிவர ரெடியாக இருக்கின்றன.
இந்த நிலையில் முத்தையா இயக்கத்தில் கார்த்தி அதிதி சங்கர் நடிப்பில் உருவான விருமன் திரைப்படம் வெளிவர ரெடியாக இருக்கிறது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று கோலாகலமாக மதுரையில் நடந்தது இதில் சிறப்பு விருந்தினராக பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் பாரதிராஜா சிங்கம்புலி இளவரசன் வடிவுக்கரசி மற்றும் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
விருமன் திரைப்படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்து உள்ளது இந்த நிகழ்ச்சியில் சூர்யாவும் கலந்து கொண்டார் அப்பொழுது அண்ணன் தம்பி இருவருமே மேடையில் ஒன்றாக சேர்ந்து பேசி மேடையை அதிரவிட்டனர் ரசிகர்களும் உற்சாகத்திலும் சந்தோஷத்திலும் திகைத்தனர். அதே சமயம் இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக ஒரு பக்கம் நடைபெற்றுக் கொண்டிருக்க மறுப்பக்கம் அஜித் ரசிகர்கள் அலப்பறை பண்ணி உள்ளார்கள்.
மதுரை என்றால் அது அஜித் கோட்டை தான் என கூறி கொண்டாடி உள்ளனர். மேலும் இயக்குனர் சிங்கம் புலி அஜித்தை வைத்து ரெட் என்னும் சூப்பர் படத்தை கொடுத்திருந்தார் அவருக்கு இன்னும் வாய்ப்புகள் கிடைத்திருந்தால் நல்ல படத்தை கொடுத்து இருப்பார் அவருக்காக தான் இந்த இடத்திற்கு வந்தோம் என கூறியும் அசத்தி உள்ளனர்.