என்றும் மறக்காத படி கார்த்திகேயாவுக்கு மிகப்பெரிய பரிசை கொடுத்த அஜித் ரசிகர்கள் வியப்பின் உச்சியில் கார்த்திகேயா.

karthikeya-
karthikeya-

தமிழ் சினிமாவில் அதிகப்படியான ஆண் ரசிகர்களை தன் வசப்படுத்தி இருக்கும் நடிகர்களில் ஒருவர் நடிகர் அஜித் தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வருவதால் ரசிகர்களும் அஜித்குமாரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகின்றனர். அஜித் கடைசியாக நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடினர்.

அதனை தொடர்ந்து இரண்டு வருடங்களுக்கு மேல் கடந்து ஒரு வழியாக வலிமை திரைப்படம் நேற்று கோலாகலமாக திரையரங்கில் வெளியானது. நேற்றிலிருந்து இன்று வரையிலும் அஜித் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர் முதல் நாள் படத்தை பார்க்க வலிமை பட வில்லன் கார்த்திகேயா, ஹுமா குரேஷி, தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் பலர் புகைப்படத்தை பார்த்து உள்ளனர்.

அப்பொழுது இந்த பிரபலங்கள் மிரண்டு போயுள்ளனர் காரணம் ரோகினி திரையரங்கம் முழுவதும் அஜித் ரசிகர்கள் ஆக்கிரமிப்புப் பண்ணி இருந்தனர். இவர்களை பார்த்தவுடன் ரசிகர்கள் புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுத்துக்கொண்டனர் கூட்டத்தை பார்த்து இவர்கள் மிரண்டு போனார்.

படத்தைப் பார்த்துவிட்டு ஒரு வழியாக படக்குழு வெளியேறியது. வெளியே வரும்பொழுது எல்லாம் ஹீமா குரேஷி கண் கலங்கி விட்டார். அதுபோல வில்லன் கார்த்திகேயாவும் தற்போது ஆச்சரியத்தில் உள்ளார். இதை வெளிப்படுத்தும் வகையில் ட்விட்டர் பக்கத்தில் சில புகைப்படங்களை போட்டுவிட்டு சில பதிவுகளையும் பண்ணி உள்ளார் அதில் அவர் கூறியுள்ளது.

நரேன்..  என் வாழ்நாள் முழுவதும் நினைவிருக்கும் மறக்கவே மாட்டேன். வியப்பில் இருக்கிறேன் ஒரு சின்ன வார்த்தை  என்னை நம்பியதற்காக வினோத் சாருக்கு நன்றி. அஜித் சாரை பார்க்க வாய்ப்பு தந்த அந்த கடவுளுக்கு நன்றி. அன்பும், ஆதரவும் தந்த அஜித் ரசிகர்களுக்கு மிகப்பெரிய  நன்றி என கூறினார்.