குஷ்பூவை திடீரென தீட்டி தீர்க்கும் அஜித் ரசிகர்கள்.. உள்ளே ஒளிந்து இருக்கும் காரணம்

kusboo-
kusboo-

80, 90 காலகட்டங்களில் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்தவர் நடிகை குஷ்பூ. இவர் ஆரம்பத்தில் நல்ல நல்ல படங்களில் நடித்து தனக்கான ஒரு இடத்தை பிடித்தார் போகப் போக திறமையும் தாண்டி கிளாமர் காட்டி நடித்ததால் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகின மேலும் பட வாய்ப்புகளும் குவிந்தன ஒரு கட்டத்தில் ரஜினி, விஜயகாந்த், கார்த்தி..

சத்யராஜ், பிரபு போன்ற நடிகர்களின் படங்களில் நடித்து கொடி கட்டி பறந்து வந்த குஷ்பூ இயக்குனர் சுந்தர் சி யை திருமணம் செய்து கொண்டார் அதன் பிறகு சினிமாவை ஓரம் வைத்துவிட்டு குடும்ப வாழ்க்கையில் அதிகம் கவனம் செலுத்து வந்த இவர் திடீரென அரசியல் பிரவேசம் கண்டார்.  தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கிறார்.

இப்படி ஓடினாலும் ஒன்னு ரெண்டு திரைப்படங்கள் எட்டிப் பார்க்கின்றன அந்த வகையில் நடிகை குஷ்பு அண்ணாத்த படத்தை தொடர்ந்து ஒன்னு ரெண்டு திரைப்படங்களில் நடித்து வருவதாகவும் சொல்லப்படுகிறது இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை குஷ்பு சிஎஸ்கே அணியின் கேப்டனும், அதிரடி ஆட்டக்காரருமான தல தோனியை சந்தித்து  புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

குஷ்பூ தோனி உடன் புகைப்படம்  எடுத்துக்கொண்டதை டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு சில பதிவுகளை போட்டுள்ளார் அதில் அவர் சொன்னது.. தல தோனி என குஷ்பு குறிப்பிட்டு  ஹீரோக்கள் உருவாக்கப்படுவதில்லை பிறக்கிறார்கள் என கூறியிருக்கிறார். இதை பார்த்த அஜித் ரசிகர்கள் அஜித் என்ன தான் தன்னை தல என கூப்பிடக்கூடாது  என சொன்னாலும்..

அவர் தான் எங்களுக்கு தல நீங்கள் இப்படி சொல்லுவது சுத்தமாக சரியில்லை எனக் கூறி தோனியை வேண்டுமானால் நீங்கள் கூல் கேப்டன், தோனி என கூறுங்கள் எங்களுக்கு எப்பொழுதுமே தல என்றால் அது அஜித் தான் எனக்கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர் இந்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் காட்டு தீ போல பரவி வருகிறது.