தமிழ் சினிமா ரசிகர்கள் மற்றும் மக்களுக்கு ஏற்றவாறு சிறப்பான படைப்புகளை கொடுத்து வருகிறார் தல அஜித். அந்த வகையில் கடந்த ஆண்டு இவர் நடித்து வெளிவந்த நேர்கொண்ட பார்வை திரைப்படம் மக்கள் மற்றும் பெண் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான படமாக அமைந்துள்ளது.
அஜித்தின் இந்தப்படம் சமூக அக்கறை கொண்ட படம் என்பதால் பலரும் இப்படத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். ஒரு முன்னணி நடிகர் இது போன்ற படங்களைத் தேர்வு செய்து நடிப்பது மிகவும் கடினம். ஏனென்றால் இத்தகைய திரைப்படங்கள் மிகப்பெரிய அளவில் லாபத்தை கொடுக்குமோ கொடுக்காதோ என நடிகர்கள் நடிக்க தயங்குவார்கள்.
ஆனால் அஜித் அவர்கள் இந்த திரைப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அதன் மூலம் மிகப்பெரிய அளவில் நற்பெயரை பெற்றார். மேலும் இது போன்ற படங்களில் அவர் தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என பலரும் அவருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தற்பொழுது அஜித் அவர்கள் ஹச். வினோத் மற்றும் போனி கபூர் கூட்டணியில் இணைந்து வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப் படத்தின் எதிர்ப்பார்ப்பு மீண்டும் மக்கள் மற்றும் போராளிகள் மத்தியில் அதிகரித்துள்ளது. ஆனால் சமீபகாலமாக இதனைப் பற்றிய எந்த ஒரு அப்டேட்டும் வெளிவராததால் ஒரு பக்கம் தல ரசிகர்கள் மிகப்பெரிய அதிர்ச்சியில் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் மீண்டும் அஜித் ரசிகர்களை கோபமடைய செய்து உள்ளார்.
அது என்னவென்றால் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான பவன் கல்யாண் பிறந்தநாளை முன்னிட்டு போனிகபூர் அவர்கள் இந்த படத்தின் போஸ்டரை வெளியிடடு வாழ்த்து தெரிவித்தார். இதனை பார்த்த தல ரசிகர்கள் பவன் கல்யாண் பிறந்தநாள் தெரிந்த உங்களுக்கு அஜித் பிறந்த நாளன்று எந்த ஒரு அப்டேட்டும் சொல்ல தெரியலையா என்று கூறி அவரை விமர்சித்து வருகின்றனர்.
ஒரு சிலர் அதையும் தாண்டி வலிமை படத்தின் அப்டேட் உங்களால் கொடுக்க முடியுமா முடியாதா என்று ஒரு பக்கம் கண்டித்தும் கூறிவருகின்றனர்.