நடிகர் அஜித்குமார் அண்மை காலமாக தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து இப்பொழுது கூட தனது 61வது திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் முதல் கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்த நிலையில் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு தொடங்கப்பட இருக்கிறது. அஜித்தும் சொந்த வேலை எல்லாவற்றையும் முடித்துவிட்டு தற்போது இரண்டாவது கட்ட ஷூட்டிங்கில் கலந்து கொள்ள இருக்கிறார்.
இந்த படத்தில் அஜித் உடன் இணைந்து மலையாள நடிகை மஞ்சு வாரியர், இளம் நடிகர் வீரா, சமுத்திரகனி, யோகி பாபு, மகாநதி, அஜய் மற்றும் பல பிரபலங்கள் இந்த திரைப்படத்தில் நடித்து வருகின்றனர். ஒரு சிலரை மட்டுமே பட குழு அறிமுகப்படுத்தியதே தவிர மற்ற நடிகர்களை சொல்லாமல் மறைத்து வைத்துள்ளது.
இதனால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்யலாமென படக்குழு திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் தற்போது கூட படக்குழு ஏகே 61 திரைப்படத்தில் ஹிந்தியில் டாப் ஹீரோவாக வலம் வரும் சஞ்சய் தத்தை நடிக்க வைத்துள்ளது ஆனால் வெளியே சொல்லாமல் படக்குழு ரகசியமாக வைத்திருந்தது.
ஆனால் எப்படியோ விஷயம் லீக் ஆகிவிட்டது. அதுவும் ஏகே 61 திரைப்படத்தில் வில்லனாக நடிகர் சஞ்சய் தத் நடிக்கப்படுவதாக கூறப்படுகிறது. ஏறக்குறைய அது உறுதியாகவும் உள்ளதாம் இதுவரை ஏகே 61 திரைப்படத்தில் நடிகர் சஞ்சய் தத் 90% நடித்து முடித்துள்ளதாக கூறப்படுகிறது. இன்னும் கொஞ்சம் சீன்கள் நடித்து முடித்து விட்டால் அவருக்கான போர்ஷன் முடிந்து விடும் என சொல்லப்படுகிறது.
ak 61படத்தின் இரண்டாவது கட்ட ஷூட்டிங் புனேவில் தொடங்க உள்ளது. அஜித்தும், சஞ்சய் தத் காட்சிகள் எடுக்கப்பட அதிகவாய்ப்புகள் இருப்பதாகவும் தகவல்கள் வெளி வருகின்றன. கேஜிஎப் 2 படத்தை தொடர்ந்து அஜித்தின் 61 வது படமும் அவருக்கு மிகப்பெரிய ஒரு அங்கீகாரத்தை கொடுக்கும் என சொல்லப்படுகிறது.