நீங்களாவது இவ்வளவு தைரியமாக பேசுகிறீர்களே.! அஜித் ரசிகர் ஆர்கே சுரேஷின் வீடியோவை பார்த்து நன்றி சொன்ன மீரா மிதுன்.!

rk-suresh
rk-suresh

RK suresh video : கடந்த சில நாட்களாகவே சமூகவலைதளத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருவது மீரா மிதுன் விஷயம்தான், இவர் கடந்த சில நாட்களாகவே தமிழ் சினிமாவில் இருக்கும் நெப்போட்டிசம் பற்றிப் பேசி வருவதாக நினைத்து சூர்யா மற்றும் விஜய் அவர்களின் குடும்பத்தையும் அவதூறாக பேசி வருகிறார்.

இது சூர்யா மற்றும் விஜய் ரசிகர்களிடையே மிகப்பெரிய கோபத்தை ஏற்படுத்தி உள்ளது, மீரமிதுனை ரசிகர்கள் திட்டி தீர்த்து வருகிறார்கள், அதுமட்டுமில்லாமல் மீராமிதுன் பேச்சுக்கு பல பிரபலங்களும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இந்த  நிலையில் தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்கே சுரேஷ் தமிழ் சினிமாவில் இருக்கும் நெப்போட்டிசம் பற்றி பேசியுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது நெப்போட்டிசம் என்பது தமிழ் சினிமாவில் இருக்கிறது அதை நானே எதிர் கொண்டுளளேன், ஆர்கே சுரேஷ் அஜித்தின் தீவிர ரசிகர் என்பது அனைவருக்கும் தெரியும் இவர் பில்லாபாண்டி திரைப்படத்தில் அஜித்தின் தீவிர ரசிகராக நடித்திருந்தார்.

ஆர்கே சுரேஷ் வீடியோ சமூக வலைத்தளத்தில் தீயாய் பரவி வருகிறது இதை பார்த்த மீராமிதுன் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் அந்த வீடியோவை பகிர்ந்து நன்றி கூறியுள்ளார். மீரா மிதுன் தொடர்ந்து விஜய் மற்றும் சூர்யாவை அவதூறாக பேசி வந்தாலும் தமிழ் சினிமாவில் நெப்போட்டிசம் இருப்பதை முதலில் கூறினார் ஆனால் யாரும் அதை கண்டு கொள்வது போல் தெரியவில்லை.

அதனால் அவரின் அடுத்த இலக்கு விஜய் மற்றும் சூர்யா அவர்களை மிகவும் கேவலமாக பேசி தன்னை பிரபலப்படுத்தி கொள்ள நினைக்கிறார். மீரா மிதுன் அதிகமாக விஜய்யைதான் டார்கெட் செய்து பேசி வருகிறார் இதை பார்த்த பல பிரபலங்களும் மீரா மிதுனுக்கு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.