நடிகர் அஜித்குமார் கடைசியாக நடித்த வலிமை திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்த போதிலும் வசூல் ரீதியாக 200 கோடிக்கு மேல அள்ளி புதிய சாதனை படைத்தது இந்த படத்தை தொடர்ந்து அஜித் நடித்தவரும் திரைப்படம் தான் துணிவு இந்த படத்தை ஹச். வினோத் இயக்குகிறார்.
போனி கபூர் மிக பிரம்மாண்ட பொருள் செலவில் தயாரிப்பு வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத், சென்னை மற்றும் வெளிநாடுகளில் படமாக்கப்பட்டு ஒரு வழியாக அண்மையில் ஷூட்டிங் ஒரு வழியாக முடிந்தது இதைத் தொடர்ந்து பட குழு டப்பிங் வேலைகளை செய்ய ஆயுதமாகி உள்ளது அதன் பூஜை கூட இன்றைய கோலாகலமாக போடப்பட்டது.
அதில் இயக்குனர் ஹச். வினோத் மற்றும் படத்தில் பணியாற்றிய ஒரு சிலர் கலந்து கொண்டனர் அந்த புகைப்படம் இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது. துணிவு படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாக அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது இருப்பினும் இப்போ ஏதேனும் அப்டேட் வந்தால் சிறப்பாக இருக்கும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
ஆனால் தீபாவளிக்கு அப்டேட் வருமா வராதா என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். இப்படி இருக்கின்ற நிலையில் அஜித் ரசிகர்கள் செய்த ஒரு தரமான சம்பவம் இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
அதாவது இந்திய -பாகிஸ்தான் போட்டி இன்று கோலாகலமாக நடைபெற்றது அப்பொழுது அஜித் ரசிகர் ஒருவர் துணிவு படத்தின் அப்டேட் கேட்டு அசத்தி உள்ளார் அதன் புகைப்படங்கள் இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு தற்போது வைரலாகி வருகிறது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இது வேற லெவல் எனக்கூறி லைக்குகளையும், கமெண்ட்டுகளையும் கொடுத்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்..
Again. Fans crazy level 🔥 #Thunivu #AjithKumar #NoGutsNoGlory pic.twitter.com/gdPjDxfTCV
— ᵀʰᵃˡᵃ⚡𝐌𝐀𝐗 (@Thala____Ajith) October 23, 2022