“துணிவு” படத்தை ப்ரமோஷன் செய்யும் அஜித் ரசிகர்கள் – இணையதளத்தை கலக்கும் புகைப்படம்..!

ajith-
ajith-

நடிகர் அஜித்குமார் இளம் இயக்குனர் ஹச். வினோத்துடன் மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்து தனது 61 வது திரைப்படமான துணிவு திரைப்படத்தில் அஜித் நடித்திருக்கிறார் இந்த படம் முழுக்க முழுக்க ஒரு உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு படம் உருவாக்கப்பட்டிருக்கிறது இந்த படத்தில் ஆக்ஷன் சென்டிமென்ட் போன்றவைகள் அதிகம் இருக்கும் என கூறப்படுகிறது.

இந்த படத்தை அஜித் ரசிகர்கள் பெரிய அளவில் எதிர்நோக்கி இருக்கின்றனர் படம் அடுத்த வருடம் பொங்கலை குறி வைத்து ரிலீஸ் ஆக இருக்கிறது தற்பொழுது இந்த படத்தின் ஷூட்டிங் அனைத்தும் வெற்றி கரமாக முடிந்த நிலையில் டப்பிங் பணிகளை நோக்கி நகர்ந்து இருக்கிறது.

துணிவு திரைப்படத்தில் அஜித் உடன் இணைந்து மலையாள நடிகை மஞ்சு வாரியார், இளம் நடிகர் வீரா, சமுத்திரகனி, யோகி பாபு, மகாநதி சங்கர், அஜய், ஜான் கொக்கன் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர். இந்த படத்தில் இருந்து இதுவரை ஒரு சில அப்டேட்டுகள் வெளிவந்த நிலையில் அடுத்ததாக படத்தின் ஃபர்ஸ்ட் பாடல் வெளியாகும் என தெரிய வருகிறது.

இப்படி இருக்கின்ற நிலையில்  அஜித் ரசிகர்கள் பிரமோஷன் வேலைகளை தொடங்கியுள்ளனர். படக்குழு தொடங்குவதற்கு முன்பாகவே அஜித் ரசிகர்கள் ஆரம்பித்துள்ளனர் மலேசியன் அஜித் ஃபேன்ஸ் துணிவு படத்தை பிரமோஷன் செய்ய வித்தியாசமாக துணிவு ஃபுட்ஸ் சால் ஒன்றை நடத்தி உள்ளனர்.

அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றது மேலும் அந்த புகைப்படங்கள் தற்பொழுது இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரல் ஆகி வருகிறது. துணிவு திரைப்படம் வெளிவரும் தேதி நெருங்க நெருங்க அஜித் ரசிகர்கள் இன்னும் செம்ம மாஸ் காட்டுவார்கள் என பலரும் சொல்லி வருகின்றனர்.

ajith
ajith
ajith
ajith