தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருப்பவர் நடிகர் அஜித். அஜித் அவர்கள் சமீபகாலமாக சிறந்த கதைகள் கொண்ட படத்தைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் இதுபோன்ற படங்கள் மிகப்பெரிய ஹிட்டடித்த வருகின்றன இந்த நிலையில் ஹச். வினோத் அவருடன் வலிமை என்ற கைகோர்த்து உள்ளார் அஜித். இப்படத்தை போனிகபூர் அவர்கள் தயாரித்து வருகிறார்.
இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் எடுக்கப்பட்டு வந்தது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் முடிந்துள்ளது.இப்படம் 70% முடிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனை தொடர்ந்து எந்த ஒரு அப்டேட்டும் வராத நிலை ஏற்பட்டுள்ளது.இதனால் ரசிகர்கள் சற்று வருத்தத்தில் இருந்தனர்.இந்த நிலையில் தல ரசிகர்களை சந்தோஷம் படும் விதத்தில் செய்தி ஒன்று வெளியகயுள்ளது.அது என்னவென்றால் முன்னணி நடிகரும்,இயக்குனருமான “சித்ரா லக்ஷ்மன்’’ அஜித் ரசிகர்கள் கூறியுள்ளர்.
இது குறித்து கூறுகையில் “மற்ற நடிகர்களின் ரசிகர்களை காட்டிலும், நடிகர் அஜித்தின் ரசிகர்கள் வித்தியசமானவர்கள். ஏனென்றால் அவருக்கு ரசிகர் மன்றம் ஏதுமில்லை, அடிக்கடி ரசிகர்களை சந்திப்பதும் கிடையாது.
ஆனால் அவரை மிகப்பெரிய அளவில் ஒரு கூட்டம் வெறித்தனமான பின்தொடர்கிறது என்றார்.