மதுரையையே திரும்பி பார்க்க வைத்த அஜித் போஸ்டர்.! ஆனால் இந்த வசனம் தான் கொஞ்சம் இடிக்குது

ajith-tamil360newz
ajith-tamil360newz

Madurai poster : தல அஜித் தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவர் இவர் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தை போனிகபூர் தான் தயாரித்து வருகிறார்.

ஆனால் கடந்த சில மாதமாகவே கொரோனா ஊரடங்கு காரணமாக படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது, கொரோனா நிலைமை சீரான பிறகுதான் படப்பிடிப்பு நடக்கும் என அஜித் மற்றும் வலிமை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் திட்டவட்டமாக அறிவித்து விட்டார்கள்.

இந்த நிலையில் மே மாதம் உழைப்பாளர் தினம் அன்று அஜீத்தின் பிறந்தநாள் அதனால் அஜித் ரசிகர்கள் பிறந்தநாளை விமர்சையாக கொண்டாடி மகிழ்ந்தார்கள், அதுமட்டுமில்லாமல் போஸ்டர் ஒட்டுவது குழந்தை மற்றும் முதியோர் இல்லத்திற்கு சென்று உணவு வழங்குவது என்பதை வழக்கமாக செய்து வந்தார்கள்.

அஜித்தின் திரைப்பயணம் 28 ஆண்டுகளை கடந்ததால் பல இடங்களில் அஜித் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டினார்கள் இந்த ஊரடங்கு நேரத்தில் அந்த போஸ்டர்கள் மக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.

அந்த வகையில் மதுரையில் ரசிகர்களால் ஒட்டப்பட்ட போஸ்டர் ஒன்று சமூகவலைதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது, அந்த போஸ்டரில் வசனமாக மேடையேறி அரசியல் பேசுபவர்கள் பலர் மேடையே ஏறாமல் அந்த அரசியலை பேசும் அதுதான் எங்க தல என வசனம் எழுதியுள்ளார்கள்.

இந்த போட்டோ இணையதளத்தில் படுவேகமாக வைரலாகி வருகிறது.

madurai
madurai