தல அஜித் தமிழ் சினிமாவில் உச்ச கட்ட நடிகர்களில் ஒருவர் இவர் தற்போது இந்திய அளவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருக்கிறார், எந்த சினிமா பின்னணியும் இல்லாமல் தனது விடாமுயற்சியாலும், கடின உழைப்பாலும் உச்ச கட்டத்திற்கு சென்றவர்.
தற்பொழுது தல அஜித் வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார், இந்த நிலையில் மே 1 அஜீத்தின் பிறந்தநாள் என்பதால் அஜித்தின் குடும்ப புகைப்படத்தை ரசிகர்கள் ஆவலுடன் இணையதளத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.
அந்தவகையில் ரசிகர்கள் பல புகைப்படங்களை பதிவிட்டுள்ளார் அதில் ஒரு புகைப்படத்தில் அஜித் அருகில் நிற்கும் பெண் அஜித்தின் தங்கை என ரசிகர்கள் அந்த புகைப்படத்தை ட்ரென்ட் செய்து வருகிறார்கள், ஆனால் அஜித்துக்கு 2 சகோதரர்கள் மட்டுமே இருக்கிறார்கள் ஒரு அண்ணனும் தம்பியும்.
இந்தப் புகைப்படத்தில் இருக்கும் பெண் யாரென்று சரியாக தெரியவில்லை, ஆனால் பல ரசிகர்கள் அஜித்தின் சகோதரி என இந்த புகைப்படத்தை மிக வேகமாக ஷேர் செய்து வருகிறார்கள்.