அந்த விஷயத்தில் அம்மாவை ஓரம் கட்டிய அஜித் மகள்.. வைரலாகும் குடும்ப புகைப்படம்

AJITH
AJITH

தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகராக வருபவர் அஜித் குமார். இவர் கடைசியாக நடித்த துணிவு திரைப்படம் நல்ல விமர்சனத்தை பெற்று 250 கோடிக்கு மேல் அள்ளியது. அதை தொடர்ந்து இன்னொரு வெற்றி படத்தை கொடுக்க தனது 62 வது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். முதலில் இந்த படத்தை  இயக்குனர் விக்னேஷ் சிவன் தான் இயக்க உள்ளார் என தகவல்கள் எல்லாம் வெளியானது.

ஆனால் கடைசியாக அவர் சொன்ன முழு கதை அந்த அளவிற்கு திருப்தி தராததால் அவரை தூக்கி விட்டு இயக்குனரை தேடிக் கொண்டிருந்த நிலையில் மகிழ் திருமேனி சொன்ன கதை லைகா நிறுவனத்திற்கு பிடித்து போக தற்போது அவர் இந்த படத்தை எடுக்க இருக்கிறார். ஆனால் இதுவரை அதிகாரப்பூர்வமாக சொல்லப்படவில்லை..

வெகு விரைவில் அறிவிப்பு வரும் என சொல்லப்படுகிறது. இந்த படம் இழுத்துக் கொண்டே போக்குவதற்கு முக்கிய காரணமே அஜித்தோ.. லைகா நிறுவனமோ.. கிடையாது. இயக்குனர் மகிழ்திருமேனி தான் என சொல்லப்படுகிறது அவர் பிரபுதேவா நடிப்பில் உருவாகி வரும் படத்தில் வில்லனாக நடித்து வருகிறார் என சொல்லப்படுகிறது.

அதை  முடித்துவிட்டு வந்த பிறகு ஏ கே 62 படப்பிடிப்பு தொடங்கும் என சொல்லப்படுகிறது.  இந்த நேரத்தை அஜித் வேறு வழியில் செலவிடுகிறார் சமிபத்தில்  வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்ட அஜித் அண்மையில் சென்னை திரும்பினார் அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகிய நிலையில் தற்போது தனது குடும்பத்துடன் ஊர் சுற்றி வருகிறார்.

இப்போ தனது மகன், மனைவி மற்றும் மகளுடன் இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஷாலினி அளவிற்கு மகள் அனோஷ்கா வளர்ந்து விட்டார் எனக் கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர். அஜித் தனது குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட அந்த அழகிய புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

AJITH
AJITH