தல அஜித் என்றால் நம்பிக்கை, நேர்மை, அன்பு, பாசம், மதிப்பு என பலரும் கூறியதுண்டு, தல அஜித் செய்யும் உதவியை எப்பொழுதும் வெளியே சொல்லிக் கொள்ள மாட்டார். கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதால் நாடு முழுவதும் 144 தடை விதிக்கப்பட்டு 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு முறையை அனைத்து மக்களும் கடைபிடித்து வருகிறார்கள்.
இதனால் மக்கள் மருத்துவம், உணவு தேவைகள் மட்டுமே வியாபாரத்தில் இருக்கின்றன மற்ற அனைத்து தொழிற்சாலைகளும் முடங்கியுள்ளது, அதேபோல் மக்களும் வீட்டிலேயே முடங்கி உள்ளார்கள், சினிமா பிரபலங்களும் வீட்டிலேயே முடக்கப்பட்டு உள்ளார்கள், தற்பொழுது எந்த ஒரு படப்பிடிப்பு நடைபெறவில்லை,
இதனால் சினிமாவும் கடுமையாக பாதித்துள்ளது, தினக்கூலி செய்பவர்கள்தான் மிகவும் கடுமையாக பாதித்துள்ளார்கள் அவர்களுக்கு சினிமா நடிகைகள் மற்றும் நடிகர்கள் உதவி செய்து வருகிறார்கள், தல அஜித் கிட்டத்தட்ட மத்திய மாநில அரசுகளுக்கும் சினிமா ஊழியர்களுக்கும் என தனித்தனியாக நிதி உதவி வழங்கி உள்ளார்.
மொத்தமாக அஜித் 1.25 கோடி ரூபாய் நிதி உதவி கொடுத்துள்ளார், இந்த நிலையில் நடிகர் கோபி அஜித்தை பாராட்டியுள்ளார், அவர் தனது டுவிட்டரில், நாட்டுக்காக 50 லட்சம் விஸ்வாசத்திற்காக 50 லட்சம் பாசத்திற்காக 25 லட்சம் என மூன்றாக கொடுத்துள்ளார் அஜித் என தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
நாட்டுக்காக 50 லட்சம்
விஸ்வாசத்துக்காக 50 லட்சம்
பாசத்துக்காக 25 லட்சம்என மூன்றாக கொடுத்துள்ளார் தல #அஜித்!❤ pic.twitter.com/MR2cW4f8qg
— Jayam.SK.Gopi (@JSKGopi) April 7, 2020