Vidaamuyarchi : நடிகர் அஜித்குமார் கடைசியாக நடித்த துணிவு திரைப்படம் கடந்த பொங்கலுக்கு வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு வசூல் ரீதியாக வெற்றி கண்டது அதை தொடர்ந்து அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு விடாமுயற்சி படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் உறுதி ஆகின.
மேலும் விடாமுயற்சி படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க மகிழ் திருமேனி இயக்க உள்ளதாக கூறப்பட்டது ஆனால் அதன் பிறகு இரண்டு மாதங்கள் ஆகியும் எந்த ஒரு அப்டேட்டும் வராமல் இருந்ததால் ரசிகர்கள் செம அப்செட் ஆகினர் மேலும் இன்னமும் இழுத்துக் கொண்டுதான் போகிறது எனக் கூறிய புலம்பி வந்த நிலையில் அண்மையில் செய்யாறு பாலு செம்ம அப்டேட் கொடுத்தார்.
அதாவது வருகின்ற ஆகஸ்ட் இரண்டாவது வாரம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் முழுக்க முழுக்க வெளிநாடுகளில் தான் ஷூட்டிங் நடைபெறும் என அஜித் திட்டம் கூறியதாக இவர் கூறினார் மேலும் படம் 40 நாட்கள் தொடர்ந்து. சூட்டிங் எடுக்கப்படும் அடுத்த ஷூட்டிங் வெகு விரைவிலேயே தொடங்கி சீக்கிரம் அனைத்து போர்ஷனையும் எடுத்து படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய விடாமுயற்சி படக்குழு அனைத்து வேலைகளையும் முன்புறமாக பார்த்து வருவதாக கூறினார்.
அதேசமயம் இந்த படத்தில் த்ரிஷா ஹீரோயின் என பலரும் சொல்லி வந்தனர் ஆனால் தற்பொழுது ஹீரோனையும் மாற்றி உள்ளது. ஆம் தொடர்ந்து கிளாமர் மற்றும் டாப் ஹீரோக்களின் படங்களில் நடித்து வெற்றிகளை அள்ளி வரும் தமன்னா தான் விடாமுயற்சி படத்தில் அஜித்துக்கு ஜோடி என கூறினார்.
இந்த தகவல் தற்பொழுது சோசியல் மீடியா பக்கத்தில் வைரல் ஆகி வருகிறது. தமன்னா கடைசியாக ரஜினியின் ஜெயிலர் படத்தில் காவலா பாடலுக்கு மரண குத்தினார். அதனைத் தொடர்ந்து விடாமுயற்சி படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்கிறார் என்ற செய்தி ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தி உள்ளது.