அஜித் ஒத்த ரூபா கூட கொடுத்து உதவவில்லை – மனவேதனையில் பேட்டியில் குமுறிய பிரபல காமெடி நடிகர்

bava laxmanan
bava laxmananbava laxmanan

Bava Lakshmanan : தமிழ் சினிமாவில் இருக்கும் நடிகர், நடிகைகளை நாம் எப்படி கொண்டாடுகிறோமோ அதே போல குணச்சித்திர நடிகர்களையும் கொண்டாட ஆரம்பித்து உள்ளோம் அந்த வகையில் பாவா லட்சுமணனை தெரியாத ரசிகர்களே கிடையாது.

பல படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து  குறிப்பாக இவர் வாம்மா மின்னல் சொல்லும் டயலாக இப்பொழுதும் ரசிகர்கள் மத்தியில் பேமஸ் ஆக இருந்து வருகிறது.  இவர்  பெரிய நடிகர்கள் தொடங்கி இளம் நடிகர்கள் வரலாறை பல்வேறு நடிகரின் படங்களில் நடித்து பேரையும், புகழையும் சம்பாதித்தவர்.

இப்படிப்பட்ட பாவா லட்சுமணனுக்கு நீரிழிவு நோய் இருந்து வந்துள்ளது இதனால் அவருடைய கால் கட்டைவிரலை அகற்றி உள்ளனர் மேலும் மருத்துவ செலவுக்காக தன்னுடன் நடித்த சக நடிகர் தொடங்கி அனைவரிடமும் உதவி கேட்டார். ஒரு கட்டத்தில் காசு இல்லாதால் அரசு ஓமந்தார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அப்பொழுதும் தனது உதவி செய்யுமாறு கேட்டுக் கொண்டார் இதனை அடுத்து விஜய் டிவி பிரபலம் பாலா அவரை சந்தித்து தன்னால் முடிந்த உதவிகளை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பேட்டியில் பாவா லட்சுமணன் அஜித் பற்றி பேசியது வைரலாகி வருகிறது. அஜித்தின் பல படங்களில் நடித்துள்ளேன் உடல் நலக்குறைவு ஏற்பட்ட போது அஜித் வீட்டுக்கு..

bava laxmanan
bava laxmanan

சென்று சிசிடிவி கேமராவில் என் முகத்தை காட்டி உதவி கேட்டேன். அஜித்தின் மேனேஜரை தொடர்பு கொண்டு உதவி கேட்டேன். ஆனால் ஒரு ரூபாய் கூட உதவி இல்லை அஜித் உதவாதது தனக்கு மனவேதனையாக இருப்பதாக பாவா லட்சுமணன் கூறியுள்ளது. இந்த தகவல் அஜித் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.