சினிமாவில் விஜய் செய்ய தவறியதை அசால்ட்டாக செய்து காட்டிய அஜித்.. அதனால் தான் இன்னைக்கு தல மாஸ்

ajith-and-vijay
ajith-and-vijay

தமிழ் சினிமா உலகில் இன்று உச்ச நட்சத்திரமாக இருப்பவர்கள் அஜித், விஜய். இவர்கள் இருவரும் நிஜத்தில் நல்ல நண்பர்களாக இருந்தாலும் சினிமா உலகில் தொடர்ந்து போட்டி போட்டு வருகின்றனர். ஏற்கனவே பல தடவை போட்டி போட்ட நிலையில் கடந்த பொங்கலை முன்னிட்டு கூட  அஜித்தின் துணிவு, விஜயின் வாரிசு படங்கள் நேருக்கு நேர் மோதின..

ஆனால் இரண்டு படங்களும் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று  வசூல் ரீதியாக வெற்றி பெற்றன. இப்படி இருக்கின்ற நிலையில் அஜித், விஜய் பற்றி ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.. அஜித் எப்பொழுதுமே வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடிக்க கூடியவர் விஜய் அப்படி கிடையாது.

ஆக்சன் காட்சி, ஓபனிங் சாங், ஹீரோயின் டூயட் என ஒரே டெம்ப்ளேட்டை தொடர்ந்து வைத்து நடித்து வருகிறார். அஜித் வாலி படத்தில் எந்த ஒரு நடிகரும் செய்ய தயங்கும் ஒரு கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருப்பார்.  தம்பியின் மனைவியின் மேல் ஆசைப்படும் வில்லனாக நடித்து ரசிகர்களுக்கு விருந்து கொடுத்தார்.

அதேபோல கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் பல நடிகர்கள் நடித்திருப்பார்கள் அவர்களில் ஒருவராக அஜித்தும்  தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி அசத்தியிருப்பார்  மங்காத்தா படத்தில் முழுக்க முழுக்க வில்லனாக நடித்து அசதியிருப்பார். கடைசியாக இவர் நடித்த விவேகம், வலிமை..

மற்றும் துணிவு போன்ற படங்களில் ஹீரோயினுடன் எந்த ஒரு டூயட் காட்சியும்,  ரொமான்ஸ் சீன்களும் இல்லாமல் சூப்பராக நடித்து அசத்தி இருப்பார் இப்படி ஒவ்வொரு படத்திற்கும் தன்னை வித்தியாசமாக காட்டி நடித்து வருகிறார். இதனால் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிடித்த ஹீரோவாக  இருந்து வருகிறார்.