உலகநாயகன் கமலஹாசன் நான்கு வருடங்களுக்கு பிறகு நடித்த திரைப்படம் விக்ரம் இந்த படம் ஆக்ஷன் திரைப்படமாக இருந்தாலும் மக்களுக்கு ஒரு புதுவிதமான இருந்ததால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று தற்போது சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது இந்த படத்தில் கமலுடன் கைகோர்த்து பகத் பாசில், விஜய் சேதுபதி, சூர்யா, நரேன் என ஒரு மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து அசத்தி உள்ளது.
விக்ரம் திரைப்படம் இதுவரை 260 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.அடுத்தடுத்த நாட்களிலும் எந்த ஒரு டாப் ஹீரோ படமும் வெளிவராமல் இருப்பதால் விக்ரம் திரைப்படம் நிச்சயம் 500 கோடி தொட்டு ஒரு புதிய சாதனை படைக்கும் என பலரும் கூறி வருகின்றனர்.
விக்ரம் படத்தை கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் நிறுவனம் தயாரித்திருந்தது தற்போது விக்ரம் வசூல் வேட்டை கண்டு வருவதால் உலக நாயகன் கமலஹாசன் படத்தை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உதவி இயக்குனர்கள் நடிகர்கள் என பலரும் பரிசுகளை கொடுத்து அசத்தி வருகிறார். குறிப்பாக லோகேஷ் கனகராஜ்க்கு 80 லட்சம் மதிப்புள்ள ஒரு சொகுசுக் காரை வழங்கினார்
அதனை தொடர்ந்து உதவி இயக்குனர்களுக்கு 13 பேருக்கு அப்பாச்சி பைக் சூர்யாவுக்கு ரோலக்ஸ் வாட்ச் என அசத்தி உள்ளார் இதை கண்ட ரசிகர்கள் கமல் இப்போது நிகழ்த்தி உள்ளார் ஆனால் நடிகர் அஜித்குமார் 90 காலகட்டத்திலேயே இதை செய்து காட்டியவர் என கூறி வருகின்றனர். 90 காலகட்டத்தில் அறிமுக இயக்குனராக வலம் வந்தவர் எஸ் ஜே சூர்யா இவர் முதலில் அஜித் வாலி படத்தை எடுத்து இயக்குனராக அறிமுகமானார்.
எஸ் ஜே சூர்யா கதை சொல்ல வரும் போது அவருக்கு பைக்கை கொடுத்து அனுப்பினார் அஜித். வாலி திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சூப்பரான வேட்டை நடத்தியது இதனால் அஜித் ரொம்ப சந்தோஷப்பட்டு போய் புதிய வெள்ளை நிற சான்ட்ரோ கார் ஒன்றை வழங்கி இருந்தாராம். இதை இப்பொழுது AK ரசிகர்கள் நினைவு படுத்தியே வருகின்றனர்.