தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக ஜொலித்த வருபவர் தல அஜித். பொதுவாக தல அஜித் சினிமாவையும் தாண்டி பல விஷயங்களில் ஆர்வம் உடையவராக விளங்குவதால் ரசிகர்களின் ரோல் மடலாக திகழ்கிறார்.இதனாலேயே இவரை ரசிகர்கள் தலைமேல் தூக்கிவைத்து ஆடி வருகிறார்கள்.
இவர் நடிப்பில் கடைசியாக விசுவாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை திரைப்படம் வெளியாகி வசூல் ரீதியாகவும்,விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பெற்றது. அதுவும் முக்கியமாக நேர்கொண்ட பார்வை பெண்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
தற்பொழுது ஒரு வருடங்களுக்கு மேலாகியும் அஜித் நடிப்பில் எந்த படமும் வெளியாகவில்லை. ஆனால் அஜித் வலிமை படத்தில் தற்போது நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்க எச் வினோத் இயக்குகிறார்.
மே 1 தல அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு வலிமை திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக உள்ளது.இத்திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முழுவதுமாக முடிந்துவிட்டது எனவே விரைவில் ரிலிஸ்சாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே தல அஜித்துக்கு பல ஆபரேஷன்கள் செய்து உள்ளது நாம் அறிந்த ஒன்று தான். அந்தவகையில் பல ஆண்டுகளுக்கு முன்பு முதுகெலும்பில் ஆபரேஷன் செய்யப்பட்டுள்ளது. ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தல அஜித் ஸ்டாண்ட் காட்சி ஒன்றில் நடித்தாராம். இந்த தகவலை ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் கூறியுள்ளார்.