தல அஜித் இயக்குனர்களையும், தயாரிப்பாளர்களையும் நம்பி சினிமா ஆரம்பத்தில் ஓடிக்கொண்டு இருந்த இவருக்கு பெரும்பாலான வெற்றி கிடைக்கவில்லை மேலும் ரசிகர்களும் பெரிதும் வருத்தப்பட்டார் இதை உணர்ந்துகொண்ட அஜித் தற்போது மக்கள் மற்றும் ரசிகர்களை சிந்திக்க வைக்கவும், ரசிக்கவைக்கும் படியான சிறப்பான படங்களை கொடுத்து வருகிறார்.
அந்த வகையில் நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து வினோத்துடன் மீண்டும் ஒரு முறை இணைந்து வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு வெளிநாட்டில் எடுக்க வேண்டிய சூழல் நிலவி உள்ளது அதற்கு சாதகமாக நிலை இல்லாததால் படக்குழு மற்ற வேலைகளை முன்புறமாக கையில் எடுத்து முடித்து வருகிறது.
இந்த படத்தை தொடர்ந்து முறையாக ஹச். வினோத் அவர்களுடன் கை கோர்த்து ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ள இந்த படமும் மிக குறைந்த நாட்களிலேயே எடுக்க அஜித்தும் படக்குழுவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அஜித் பற்றிய ஒரு சுவாரஸ்யமான வீடியோ ஒன்று சமூக வலைதளப் பக்கத்தில் வைரலாகி வருகிறது விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் நடித்த பில்லா படத்தின் ஷூட்டிங்கின்போது அஜித் தன்னுடன் பயணித்த படக்குழுவினர்களை வைத்து புகைப்படம் எடுத்தார் அந்த வீடியோ தற்போது சமூக வலைதளப் பக்கத்தில் கசிந்து வேற லெவலில் ட்ரெண்டாகி வருகிறது.
Thala #Ajith sir during #Billa movie.
Previous Video deleted for copyright, sorry.| Video : Sittrarasu | #Valimai | #Ajithkumar | #Ajithkumarphotography | pic.twitter.com/Yf1eu5DiFC
— Ajith | Be Safe – Wear Mask | (@ajithFC) June 14, 2021