சினிமா உலகில் ஒரு சில கூட்டணிகள் அமைந்தால் அந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு வேற லெவலில் எகிறி கிடக்கும் அந்த வகையில் அஜித், வினோத், போனிகபூர் ஆகிய மூவரின் கூட்டணி மிகப் பெரிய ஒரு கூட்டணியாக சினிமா உலகில் பார்க்கப்படுகிறது அதனால் வலிமை படத்திற்கான எதிர்பார்ப்பும் வேற லெவல் உயர்ந்துள்ளது படம் முழுக்க முழுக்க ஆக்ஷன், சென்டிமென்ட் என இருப்பதை புரோமோ மற்றும் டிரைலரில் காண முடிந்தது.
சரியாக இரண்டு வருடம் கழித்து ரசிகர்களுக்கு விருந்து படைக்க வருகின்ற பிப்ரவரி 24ஆம் தேதி கோலாகலமாக வெளியாக இருக்கிறது அதற்கான பிரமோஷன் வேலைகளை யும் ரெடி செய்து வருகிறார் இயக்குனர் போனிகபூர் மேலும் தனது சமூக வலைதளப் பக்கத்தில் முப்பது செகண்ட் இருக்கும் ப்ரோமோவை வெளியிட்டு அசத்தி வருகிறார்.
ஆனால் வலிமை படத்தை மிகப்பெரிய அளவில் புரோமோஷன் செய்ய போனி திட்டம் போட்டு வருகிறார். முதலாவதாக அஜித்துடன் ஒரு உதவியை நாடியுள்ளார் அதாவது நீங்கள் இந்த படத்திற்கு ஒரு சின்ன புரோமோ செய்யுங்கள் நீங்கள் வலிமை படம் குறித்து பேசி ஒரு சின்ன வீடியோவை வெளியிட்டால் வலிமை படத்திற்கான பிரமோஷன் சிறப்பாக இருக்கும் என கூறி உள்ளார்.
ஆனால் அவர் தனது கொள்கையில் இருந்து பின்வாங்காமல் நான் நிச்சயமாக வலிமை படத்தைப் பற்றி பேச மாட்டேன் என உறுதியாக கூறி உள்ளார். போனி கபூர் வேறு வழியில்லாமல் படம் எடுக்கப்பட்டு சில மாதங்கள் ஆகிவிட்டது மேலும் படம் பல்வேறு தடைகளை தாண்டி வந்துள்ளதால் படத்தின் பட்ஜெட்டையும் தாண்டி பல்வேறு செலவுகளும் இழுத்துக் கொண்டே போனதால் படம் மிகப்பெரிய அளவில் ரிலீசாகி வசூல் செய்தால் மட்டுமே மொத்த பணத்தையும் மீட்டெடுக்க முடியும்.
அதேசமயம் லாபம் எடுக்க முடியும் என போனிகபூர் நம்பி உள்ளார் அதற்காக மிகப்பெரிய அளவில் புரமோஷன் செய்ய போனிகபூர் திட்டம் போட்டார் ஆனால் அஜித் உதவி செய்யாமல் போனதால் தற்பொழுது தனது மகளை வைத்து வலிமை புரமோஷனை செய்ய இருக்கிறாராம். இத்தனை அறிந்த ரசிகர்கள் அந்த ஒத்த மனுஷன் அடுத்த படத்தை தயாரிப்பாரா அல்லது வலிமை படத்தை புரமோஷன் செய்வாரா என கூறி புலம்பி வருகின்றனர்.