கேங்ஸ்டர் திரைப்படத்தில் இணைந்த அஜித், தனுஷ்.? இயக்குனர் யார் தெரியுமா.? ரகசியத்தை உடைத்த பரத்

Actor Ajith
Actor Ajith

Ajith : தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு நிரந்தர இடத்தை பிடித்திருக்கும் அஜித். தற்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் லைகா தயாரிப்பில் உருவாக இருக்கும் விடாமுயற்சி படத்தில் நடிக்க இருப்பதாக அஜித்தின் பிறந்தநாள் மே 1 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் எந்த ஒரு அப்டேட்டையும் பட குழு சைடுல இருந்து வெளிவரவில்லை ஆனால் சினிமா பிரபலங்கள் பலரும் விடாமுயற்சி படத்திற்கு ஆதரவு கொடுத்தனர் மேலும் அப்டேட்டுகளையும் கொடுத்தனர் அதாவது அஜித் விடாமுயற்சி   படத்திற்காக ரெடியாகி வருகிறார்.

சூட்டிங் தொடங்கப்படும் போது உறுதியான எனக்கூறி வந்தனர். அதற்கு ஏற்றார் போல தற்பொழுது ஒரு அப்டேட் கிடைத்து. இந்த மாதம் இறுதியில் சூட்டிங் தொடங்கப்படுகிறதாம் படத்தில் அர்ஜுன், அர்ஜுன் தாஸ், தமன்னா, த்ரிஷா போன்றவர்கள் நடிக்க இருப்பதாகவும்..

படம் முழுக்க முழுக்க திரில்லர் மற்றும் ஆக்சன் கலந்த படமாக உருவாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது இந்த நிலையில் அஜித் ஒரு மிகப்பெரிய கேங்ஸ்டர் படத்தை தவற விட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் பரத் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் அஜித், தனுஷ் மற்றும் நான் நடிக்க இருந்த திரைப்படம் காசிமேடு..  இந்த படம் முழுக்க முழுக்க கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாக இருந்தது. சில காரணங்களால் திடீரென டிராப் செய்யப்பட்டது என பரத் தெரிவித்துள்ளார்.

இந்த காசிமேடு  படம் உருவாகி இருந்தால் நிச்சயம் தமிழ் சினிமாவிற்கு மிகப்பெரிய ஒரு கேங்ஸ்டர் திரைப்படம் கிடைத்திருக்கும் அதுவும் வெறித்தனமாக இருந்திருக்கும் என  விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் பலரும் கமெண்ட் அடித்து வருகின்றனர்.