சினிமா வேண்டாம் என முடிவெடுத்த அஜித்..? விடாமல் துரத்திய நடிகை ராதிகா..! கடைசியில் என்ன நடந்தது தெரியுமா..

ajith
ajith

தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் அஜித்குமார் இவர் நடிக்கும் படங்கள் ஒவ்வொன்றும் இப்பொழுது வெற்றி படங்களாக மாறுகின்றன தற்பொழுது கூட தனது 61வது திரைப்படத்தில் அஜித் வெற்றிகரமாக நடித்து வருகிறார் இந்த படத்தின் இறுதிக்கட்ட படபிடிப்பதற்காக நடிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர் ஆனால் அஜித் மற்றும் மஞ்சு வாரியார் ஆகியோர்கள் பைக்கின் மூலம் லடாக் பயணம் மேற்கொண்டுள்ளனர் தொடர்ந்து அதன் புகைப்படங்கள் வெளிவந்து அசத்துகின்றன.

இதனால் தனது கோடிக்கணக்கான ரசிகர்களை சந்தோஷப்படுத்தி வருகிறார் அஜித். அனால் ஆரம்ப காலகட்டத்தில் சினிமாவை வேண்டாமே என முடிவெடுத்துள்ளார் அஜித் அப்படி ஒரு நிலைமைக்கு அவர் தள்ளப்படும் இருந்தார் ஆரம்பத்தில் சினிமாக்களில் ஒரு பக்கம் நடித்துக் கொண்டிருந்தாலும் மறுபக்கம் பைக் ரேஸ், கார் ரேஸ் போன்றவற்றில் அலாதி பிரியம் கொண்டவர்.

அதனால் பல போட்டிகளில் கலந்து கொண்டார். அதனால் பல விபத்துகளும் அவருக்கு ஏற்பட்டது அப்படி ஒரு கட்டத்தில் இவருக்கு மிகுந்த விபத்து ஏற்பட்டதால் ஒரு கட்டத்தில் சினிமா வேண்டாம் அண்ணனுடன் வெளிநாட்டில் தங்கி விடலாம் என்ற எண்ணத்தில் அஜித் இருந்தார் ஆனால் அவரது பாதையை அப்போது மாற்றி அமைத்தது  திரைப்படம் பவித்ரா தான்.

இந்த படத்தின் கதைப்படி ஒரு கேன்சர் நோயாளி அதுவும் இளம் வயது பையனாக இருந்தால் நன்றாக இருக்கும் என படக்குழு  தீர்மானித்தது அப்பொழுது தான் அமராவதி படத்தில் நடித்து முடித்து அஜித் விபத்தில் சிக்கி  ஓய்வு எடுத்துக்கொண்டு இருந்தார். அஜித்தின் போட்டோவை காட்டி நடிகை ராதிகாவிடம் கேட்டனர் அவரும் அஜித்தின் புகைப்படத்தை பார்த்து நல்லாத்தான் இருக்கிறான்.

இவனையே ஓகே பண்ணலாம் என படக்குழு திட்டமிட்டதாம் அஜித்தை சந்தித்த படக்குழு இந்த ஒரு படம் மட்டும் நடிச்சு கொடுங்க என கேட்டதாம்.. மேலும் பேசிய படக்குழு ராதிகா மேடம் பார்த்து ஓகே சொல்லிட்டாங்க உங்க சம்மதம் தான் தேவை என கேட்க அஜித் படத்தில் நடித்தார் அந்த படத்தை தொடர்ந்து ஆசை, நேசம் என அடுத்தடுத்த படங்கள் அஜித்திற்கு கிடைக்க.. அதன் பிறகு சினிமா டிராக்கை கையில் எடுத்துக் கொண்டார் அஜித்..