சினிமாவில் அடுத்த ஹீரோயின் ரெடி.. ஷங்கர் மகளைத் தொடர்ந்து அடுத்தது அஜித் மகளா.? வைரலாகும் புகைப்படம்..

ajith-shankar

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித்குமார் இவர் தற்பொழுது வினோத் இயக்கத்தில் துணிவு என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது பொங்கல் தினத்தை முன்னிட்டு மிகவும் பிரபலமாக வெளியாக இருக்கும் துணிவு திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

துணிவு திரைப்படத்தில் ரசிகர்களுக்கு ஏற்றது போல் பல காட்சிகள் இருக்கும் என படக் குழு ஏற்கனவே அறிவித்துள்ளது அது மட்டுமில்லாமல் புதுவிதமான அஜித்தை இந்த திரைப்படத்தின் மூலம் பார்க்கலாம் எனவும் கூறியுள்ளார்கள். ஃபர்ஸ்ட் சிங்கள் பாடல் விரைவில் வெளியாக இருக்கிறது இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி ரசிகர்களிடைய பெரும் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியது.

அஜித் சினிமாவில் நடித்து வந்த ஷாலினி அவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இரவீட்டார் சம்மதத்துடன்   இவர்களின் காதல் திருமணத்தில் முடிந்தது அதேபோல் திருமணத்திற்கு பிறகு அஜித் ஷாலினியை எந்த ஒரு திரைப்படத்திலும் நடிப்பதற்கான அனுமதி தரவில்லை ஆனால் சமீபத்தில் நடிகை ஷாலினி நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தால் நடிப்பதற்கு தயார் என ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

ajith daughter
ajith daughter

அஜித் ஒரு பக்கம் இருந்தாலும் அவரின் குடும்பம் வேறொரு பக்கம் இருந்து வருகிறது இந்த நிலையில் அஜித் தன்னுடைய மகளை நினைத்து மிகவும் சந்தோஷமான  நிலையில் இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் படபிடிப்பு இல்லாத நேரத்தில் முழுக்க முழுக்க தன்னுடைய குடும்பங்களுடன் தான் நேரத்தை செலவிடுவார் அஜித் மற்றும் ஷாலினி தம்பதிக்கு அனோஷ்கா என்ற மகள் இருக்கிறார் அதுமட்டுமில்லாமல் ஆத்விக் என்ற மகனும் இருக்கிறார்.

ajith daughter

இந்த நிலையில் அஜித்தின் மகள் தன்னுடைய அம்மா ஷாலினியுடன் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பார்க்க திரையரங்கிற்கு வந்துள்ளார். அப்பொழுது அதன் புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது இந்த நிலையில் மடமடவென வளர்ந்து ஹீரோயின் போலவே மிகவும் அழகாக இருக்கிறார் அஜித் மகள் இதை பார்த்த ரசிகர்கள் பலரும் அடுத்த ஹீரோயின் சினிமாவிற்கு ரெடி என பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

ajith daughter