தல அஜித் இந்திய அளவில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கிறார். அஜித் திரைப்படம் திரையரங்கில் வந்தாலே திரையரங்கமே திருவிழா போல் மாறி விடும் அந்தளவு அஜித் ரசிகர்கள் அத்திரைப்படத்தை கொண்டாடுவார்கள். அஜித் ஆரம்ப காலகட்டத்தில் பல தோல்வி திரைப்படங்களை கொடுத்துள்ளார் அந்த தோல்வி திரைப்படங்கள் தான் எனக்கு வெற்றியை தேடிக் கொடுத்தது என பலமுறை கூறியுள்ளார் அஜித்.
அதுவும் ஐந்து திரைப்படங்களும் பெரும் தோல்வி திரைப்படங்களாக மாறியது இதுபோல் எந்த ஒரு நடிகருக்கும் நடந்ததே கிடையாது. இந்த நிலையில் அது எந்த இந்த திரைப்படம் என்று இங்கே காணலாம்.
உல்லாசம் : தல அஜித், விக்ரம், மகேஸ்வரி ஆகியோர்கள் நடிப்பில் இயக்குனர் ஜேடி மற்றும் ஜெர்ரி இயக்கத்தில் வெளியாகிய திரைப்படம் தான் உல்லாசம் இந்த திரைப்படம் ரசிகர்களிடம் மாபெரும் தோல்வியை தழுவியது என்னதான் லவ் ஸ்டோரி ஆக இருந்தாலும் அஜித்திற்கு எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை ஆனால் பாடல்கள் ரசிகர்களை கவர்ந்தது இந்த திரைப்படத்தை பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தன்னுடைய சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரித்தார். இந்த திரைப்படம் பெரிய அளவில் திரையரங்கில் ஓடவில்லை என்பது மட்டும் குறிப்பிடத்தக்கது.
பகைவன் : அஜித், சத்யராஜ், அஞ்சனா ஆகியோர்கள் இணைந்து நடித்த திரைப்படம் தான் பகைவன் இந்த திரைப்படத்தை ரமேஷ் பாலகிருஷ்ணா இயக்கியிருந்தார். மேலும் இந்த திரைப்படத்தை விஸ்வாஸ் சுந்தர் தயாரித்திருந்தார். இந்த திரைப்படத்தில் அஜித் வேலை இல்லாமல் சுற்றி வருவார் அதன் பிறகு காதலில் விழுவார் அதுமட்டுமில்லாமல் பிரதமரின் மகளையே கடத்தி அஜித் கதாநாயகிக்கும் அவருக்கும் இடையே இருக்கும் காதலை கொண்டு போகும் திரைப்படம்தான் இந்த திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை தழுவியது.
ரெட்டை ஜடை வயசு: 1997 ஆம் ஆண்டு சிவகுமார் இயக்கத்தில் அஜித் மற்றும் மந்திரா நடிப்பில் வெளியாகிய திரைப்படம்தான் ரெட்டை ஜடை வயசு. இந்த திரைப்படத்தில் கவுண்டமணி, செந்தில், பொன்வண்ணன் நடித்த இந்த திரைப்படமும் அஜித்திற்கு மிகப்பெரிய தோல்வி திரைப்படமாக அமைந்தது.
ராசி: 1997 ஆம் ஆண்டு அஜித் குமார், ரம்பா, பிரகாஷ்ராஜ், வடிவேலு ஆகியோர் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் ராசி இந்த திரைப்படத்தை முரளி அப்பாஸ் இயக்கினார்கள் இந்த திரைப்படத்தை சக்கரவர்த்தி என்பவர் தயாரித்திருந்தார் இந்த திரைப்படமும் அஜித்திற்கு தோல்வியை திரைப்படமாக அமைந்தது
நேசம் : அஜித், மகேஸ்வரி, மணிவண்ணன், கவுண்டமணி, செந்தில் ஆகியோர் நடிப்பில் ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஏழாம் ஆண்டு வெளியில் வந்த படம் நேசம் இதை சுபாஸ் இயக்கியிருந்தார். இந்த திரைப்படத்தில் நடித்த மகேஷ்வரி பிரபல நடிகை ஸ்ரீதேவியின் உறவினர் ஆவார் ஐவரும் நடித்திருந்தார் இந்த திரைப்படமும் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தால் மிகப்பெரிய தோல்வி திரைப்படமாக அமைந்தது.
இப்படியே போனால் நம் மார்க்கெட் சரிந்து விடும் என தெரிந்துகொண்டு மிகவும் துணிச்சலுடன் நடித்த திரைப்படம் தான் காதல் மன்னன் இந்தத் திரைப்படத்தை சரண் தான் இயக்கியிருந்தார் அஜித்குமார் மானஸ் விஸ்வநாதன் விவேக் கரன் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இந்த திரைப்படத்தை சுதிர்குமார் தயாரித்திருந்தார். இந்த திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது.
அப்போதைய காலகட்டத்தில் இந்த திரைப்படத்தை இளைஞர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடினார்கள் தன்னுடைய ஆரம்பகால கட்டத்தில் அஜித் இத்தனை தோல்வி திரைப்படங்களை கொடுத்து மீண்டும் விடாமுயற்சியுடன் நடித்த திரைப்படம் தான் காதல் மன்னன் இந்த திரைப்படம் தான் எனக்கு சினிமாவில் பெரும் புகழையும் பெற்றுக் கொடுத்தது அதுமட்டுமில்லாமல் அஜித் ஐந்து தோல்வி திரைப்படங்களுக்கு பிறகு தன்னை ஒரு நல்ல நடிகனாக செதிக்கு கொண்டார் என்றே கூறலாம்.