Ajith : தமிழ் சினிமாவில் இன்று உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் அஜித்குமார் துணிவு படத்தை தொடர்ந்து லைகா தயாரிப்பில் மகிழ்ச்சி திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி நடிக்க இருப்பதாக அஜித்தின் பிறந்தநாள் மே ஒன்றாம் தேதி அதிகாரப்பூர்வமாக சொல்லப்பட்டது ஆனால் சொல்லி இரண்டு மாதங்கள் ஆகியும் எந்த ஒரு அப்டேட்டும் படக்குழு சைடுல இருந்து வராததால் கடுப்பான ரசிகர்கள் சமூக வலைதள பக்கங்களில் படம் டேக்ஆப் ஆகுமா இல்லையா என கமெண்ட் அடிக்க ஆரம்பித்தனர்.
இந்த நிலையில் தான் பி வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவான சந்திரமுகி 2 படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது அப்பொழுது லைகா நிறுவனத்தின் தலைவர் சுபாஷ்கரன் கலந்து கொண்டார் மேடை ஏரியா அவரிடம் விடாமுயற்சி அப்டேட் கொடுங்கள் என ரசிகர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அவரும் விடாமுயற்சி படம் எங்களுக்கு மிகப்பெரிய ஒரு ப்ராஜெக்ட் சீக்கிரம் ஷூட்டிங் தொடங்கும் என உறுதியாக கூறினார்.
அதன் பிறகு படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது மேலும் படம் சம்பந்தமான தகவல்களும் அடுத்தடுத்து வெளி வருகின்றன அதன்படி படத்தின் ஷூட்டிங் துபாயில் தொடங்கும் என்றும், படத்தின் ஷூட்டிங் இந்த மாதம் ஆரம்பிக்கப்பட்டு அடுத்த வருடம் ஜனவரியில் முடியும், அடுத்த வருடம் கோடை விடுமுறையில் படம் ரிலீஸ் ஆகும் எனவும் தகவல்கள் வெளிவந்தன இந்த நிலையில் அந்தணன் விடாமுயற்சி படம் குறித்தும் அஜித் குறித்தும் பேசியுள்ளது.
பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது அவர் சொன்னது என்னவென்றால்.. ஏற்கனவே துபாயில் அஜித்திற்கு ஒரு வீடு இருக்கிறதாம் அதுபோக சமீபத்தில் தான் அஜித் அங்கு ஒரு அலுவலகம் அமைத்திருக்கிறார். சில ட்ரோன்களை வாங்கியும் இருக்கிறாராம் இதையெல்லாம் பார்க்கும் பொழுது துபாயில் ஒரு பக்கம் ஷூட்டிங்கில் கலந்து கொண்டது.
மாதிரி ஆச்சு இன்னொரு பக்கம் அஜித்தின் சொந்த விஷயங்களை பார்த்துக் கொண்டது மாதிரி என கூறினார். ஏற்கனவே அஜித் பைக் விரும்பிகளுக்காக ஒரு நிறுவனத்தை ஆரம்பித்தார் அதேபோல் ட்ரோன்களை வைத்து வேறு ஏதாவது பிசினஸ் செய்யும் மன நிலைமையில் இருக்கிறாரா என்று தெரியவில்லை அதன் காரணமாக கூட துபாயில் ஒரு அலுவலகத்தை அமைத்திருக்கலாம் என கூறியு ள்ளார்.