நடிகர் அஜித்குமார் தொடர்ந்து ஆக்ஷன் திரைப்படங்களைக் கொடுத்து அசத்தி வருகிறார் அந்த வகையில் வலிமை படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து அஜித் நடித்து வரும் திரைப்படம் துணிவு. இந்த படமும் மிகப்பெரிய ஒரு ஆக்சன் திரைப்படமாக உருவாகி வருகிறது.
அதே சமயம் இந்த படம் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வருவதாக கூறப்படுகிறது. துணிவு படத்தில் அஜித்துடன் இணைந்து மலையாள நடிகை மஞ்சு வாரியர், இளம் நடிகர் வீரா, சமுத்திரக்கனி, யோகி பாபு, மகாநதி சங்கர், அஜய், ஜான் கொக்கின் மற்றும் பல நடிகர் நடிகைகள் நடித்துள்ளனர்.
துணிவு படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் வெற்றிகரமாக முடிந்த நிலையில் அடுத்ததாக டப்பிங் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது ஏற்கனவே டப்பிங் பூஜை போடப்பட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையதள பக்கத்தில் வைரலாகின. ஏற்கனவே டப்பிங் பணிகள் தொடங்கிய..
போது இந்த படத்தில் நடித்த பிக்பாஸ் அமீர் மற்றும் ஹீரோயின் மலையாள நடிகை மஞ்சு வாரியார் ஆகியோர் டப்பிங் பேசினார் அதன் புகைப்படங்கள் கூட வெளிவந்தன அதனை தொடர்ந்து தற்பொழுது கிடைத்துள்ள ஒரு தகவல் என்னவென்றால் நடிகர் அஜித் குமார் தற்போது டப்பிங் பணிகளை வெற்றிகரமாக முடித்துவிட்டாராம்.
பட குழு போஸ்ட் ப்ரோமோஷன் வேலைகளில் தீவிரம் காட்டி வருகிறது என கூறப்படுகிறது. துணிவு திரைப்படம் அடுத்த வருடம் பொங்கலை முன்னிட்டு கோலாகலமாக ரிலீசாக இருக்கிறது இந்த படத்தை எதிர்த்து விஜயின் வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு வருகிறது. இதனால் எட்டு வருடங்களுக்குப் பிறகு இருவரும் மோதி கொள்கின்றனர் இதில் அஜித்தின் கை தான் ஓங்கும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது பொறுத்திருந்து பார்ப்போம் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்..