தல அஜித் இன்று தமிழ் சினிமாவில் உச்ச நடிகராகவும் வசூல் மன்னனாக வலம் வருகிறார். தற்பொழுது அஜித்திற்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. ஆனால் ஒரு காலகட்டத்தில் அஜித் பல தோல்வி திரைப்படங்களை கொடுத்துள்ளார்.
அதேபோல் தன்னுடைய இளமைக் காலத்தில் அஜித் பலரை கஷ்டப்படுத்தி உள்ளதாக தற்பொழுது தெரிய வந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் சமீபகாலமாக பலரையும் பேட்டி எடுப்பதன் மூலம் பல தகவல்கள் தெரியவருகிறது.
தற்பொழுது உள்ள காலகட்டத்தில் சினிமாவில் ஜென்டில்மேன் என்று அன்போடு அழைக்கப்படுபவர் தல அஜித் தான் ஆனால் இவர் பிரபல தயாரிப்பாளர் ஒருவரிடம் கிட்ட தட்ட ஆறு லட்சம் ரூபாய் பணம் வாங்கிக்கொண்டு 25 வருடமாக தராமல் இருந்து வருவதாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பாளராக வலம் வருபவர் 7 சேனல் நிறுவனத்தின் உரிமையாளர் மாணிக்க நாராயணன். இவரிடம் தல 1995 ஆம் ஆண்டு உங்கள் திரைப் படத்தில் நான் நடிக்கிறேனா கூறி ஐந்து லட்ச ரூபாய் கடனாக வாங்கிக் கொண்டு தன்னுடைய பெற்றோரை வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார்.
அதன் பிறகு சிறிது காலம் கழித்து அஜித்திடம் போய் கால்சீட் கேட்டுள்ளார் அந்த தயாரிப்பாளர். கடன் கொடுத்தவர் ஆச்சே கால்ஷீட் தருகிறேன் என சிறிது காலம் இழுத்து அடித்துள்ளார். அதன்பிறகு 1998ஆம் ஆண்டு உங்கள் திரைப்படத்தில் நடிக்கிறேன் என கூறி மீண்டும் அட்வான்ஸாக 7 லட்சம் ரூபாய் வாங்கினார்.
அதன்பிறகு படத்திலும் நடிக்க ஆரம்பித்தார் ஆனால் அந்தத் திரைப்படம் டிராப் ஆகிவிட்டது. இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் அஜித்திடம் கொடுத்த அட்வான்ஸ் தொகையை கொடுங்கள் என திருப்பி கேட்டுள்ளார் ஆனால் தல அஜித் பிஸியாக இருப்பது போல் காட்டிக் கொண்டு தன்னுடைய மேலாளர் சுரேஷ் சந்திராவிடம் கூறியுள்ளார்.
அதனால் அந்த பணத்தை தராமல் இழுத்தடித்து உள்ளாராம். ஆனால் இன்று அஜித் 50 கோடி வரை சம்பளமாக வாங்கினாலும் இன்னும் அந்த பணத்தை திரும்பி தரவில்லையாம் இதனை தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் சமீபத்தில் ஒரு பேட்டியில் டூரிங் டாக்கீஸ் தளத்தில் ஓப்பனாக ஒருமையில் பேசி விட்டார்
இந்த தகவல் அஜித் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது அதுமட்டுமில்லாமல் இது அனைத்திற்கும் தன்னிடம் ஆதாரம் இருப்பதாகவும் கூறி பலரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளார்.
இதோ அந்த வீடியோ