தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் இவர் அமர்க்களம் திரைப்படத்தின் போது காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் ஒரு மகள் மற்றும் மகன் இருக்கின்றனர் இப்பொழுதும் அஜித்தும் ஷாலினியும் காதலித்து வருகின்றனர்.
அதனை உறுதிப்படுத்தும் வகையில் பல புகைப்படங்கள் வீடியோக்கள் வெளிவந்து ஆச்சரியப்படுத்துகின்றன. அஜித் ஷாலினியை திருமணம் செய்து கொள்வதற்கு முன்பாக பல ஹீரோயின்களை துரத்தி துரத்தி காதலித்து உள்ளார் உங்களுக்கு அஜித் ஹீராவை காதலித்தது தான் தெரியும்.. ஆனால் அதற்கு முன்பாக வேறு ஒரு ஹீரோயினை துரத்தி துரத்தி காதலித்து உள்ளார் அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்..
அஜித்தின் வான்மதி, உன்னை தேடி போன்ற படங்களில் நடித்தவர். நடிகை சுவாதி விஜய்யின் செல்வா, தேவா, வசந்த வாசல் போன்ற படங்களில் சுவாதி நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. நிம்மதி படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது அஜித் சுவாதியை துரத்தி துரத்தி காதலித்து உள்ளார்.
இந்த விஷயத்தை கேள்விப்பட்ட சுவாதியின் அம்மா அஜித் அப்பொழுது பெரிய நடிகர் கிடையாது எனக் கூறி காதலுக்கு முட்டுக்கட்டை போட்டு உள்ளார் மேலும் என் பொண்ணு பின்னாடி தொடர்ந்து வராத எனக் கூறி காதலுக்கு ஆப்பு வைத்தார் அதன் பிறகு அஜித் சுவாதியிடம் பேசுவதை முற்றிலுமாக குறைத்துக் கொண்டார்.
அதன் பிறகு ஹீராவை காதலித்து வந்தார் அதுவும் பிரச்சனையில் முடிய கடைசியில் அமர்களம் திரைப்படத்தில் நடித்து வந்த பொழுது ஷாலினிடம் காதலை சொல்லி பின் திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது ஆனால் முதலில் சுவாதி காதலுக்கு ஓகே சொல்லியிருந்தால் இப்போ அவருடைய ரேஞ்ச் வேற என பலரும் கூறி வருகின்றனர்.