தோல்விகளை கண்டு பயப்படாதவர் அஜித் – சைத்ரா ரெட்டி பேச்சு

Ajith
Ajith

Ajith : சைத்ரா ரெட்டி சின்னத்திரை, வெள்ளித்திரை என இரண்டிலும் நடித்து ஓடிக்கொண்டிருக்கிறார். தற்பொழுது கயல் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த வருகிறார் இந்த சீரியல் டிஆர்பி யில் எப்பொழுதுமே மாஸ் காட்டி வருகிறது. இப்படிப்பட்ட சைத்ரா ரெட்டி சமீபத்திய பேட்டி ஒன்றில் அஜித் குறித்து சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார் அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்..

அஜித் சாரை பார்க்க போகிறோம் என்ற எண்ணத்தில் அதை பேச வேண்டும் இதை பேச வேண்டும் என ஏகப்பட்ட கேள்வி கேட்க வேண்டும் என என் மனைக்குள் ஓடிக்கொண்டிருந்தது ஆனால் அவரை பார்த்தவுடன் அனைத்தும் மறந்து விட்டது. நாம் இயல்பு நிலைக்கு திரும்பவே சில நிமிடங்களாகும்..

பிக் பாஸ் 7-ல் தெறிக்க விடும் அர்ச்சனாவின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா.! வைரல் புகைப்படம்

அதையும் தாண்டி சிலர் கேள்விகளை எல்லாம் அஜித் சாரிடம் நான் கேட்டிருக்கிறேன் நீங்கள் பிரியாணி நன்றாக செய்வீர்கள் என்று நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம் அதை பற்றி கூறுங்கள் என்று கேட்ட பொழுது அஜித் பிரியாணி குறித்தும்  அதனுடைய சுவைகுறித்தும் விவாதிக்கும் பொழுது நமக்கு நாக்கில் ஏற்றி ஊறிவிடும் அந்த அளவிற்கு அருமையாக விளக்கம் கொடுப்பார் அஜித் சாரை முதல் முறையாக பார்த்த பொழுது நான் ஹாய் சார் சொன்னவுடன் அவரும் ஹாய் சொன்னார்..

என்னை ஞாபகம் இருக்கிறதா என கேட்டேன் உடனே முதல் முறை  எங்கே சந்தித்தோம் என கேட்டேன் அவர் அந்த இடம் நேரம் மறக்காமல் அப்படியே கூறி என்னை வியக்க வைத்தார் ஒரு நடிகராக அவர் எத்தனையோ பேரை சந்தித்து இருப்பார் பல்வேறு இடங்களில் போய் இருப்பார்.  நமக்கே கூட ஞாபகம் இருக்காது ஆனால் அவ்வளவு பிரபலமாக இருக்கும் அஜித்  எந்த இடத்தில் சந்தித்தோம் என்றெல்லாம் சரியாக கூறினார்.

சாப்பாட்டில் பல்லி கடந்ததை பார்த்து அதிர்ச்சியான முத்து.. இதுதான் சரியான நேரம் என மீனாவை வச்சி செய்யும் விஜயா – சிறகடிக்க ஆசை ப்ரோமோ

வலிமை சூட்டிங் ஸ்பாட்டில் சில காட்சிகளில் நான் தவறு செய்து விட்டேன் அப்பொழுது நான் மிகவும் சோகமாக இருந்தேன் அஜித் சார் என்னிடம் வந்து படப்பிடிப்பு தளத்தில் தவறுகள் நிகழ்வதெல்லாம் சாதாரணம்.. இதற்காக நீங்கள் கஷ்டப்பட வேண்டியது கிடையாது எனக் கூறி எனக்காக சில காட்சிகள் அவர் தவறாக நடித்தார்.

என்னிடம் வந்து பாருங்கள் எத்தனை படங்களில் நடித்திருக்கிறேன்? எனக்கே சில காட்சிகள் தவறாக போகிறது எனக் கூறியுள்ளார் நான் இல்ல சார் நீங்க வேணும்னே நடிக்கிறீங்க நீங்க தவறு செய்யக்கூடிய ஆள் கிடையாது எனக் கூறினேன். அஜித் எவ்வளவு பெரிய உயரத்தில் சின்ன நடிகர், நடிகைகளை  அன்பாகவும் பாசமாகவும் பார்த்துக் கொண்டார் என கூறினார்.