அன்றிலிருந்து இன்றுவரை குறையாத காதலுடன் ஷாலினி பிறந்தநாளை கொண்டாடிய அஜித்.! வைரலாகும் புகைப்படம்

AJITH-SHALINI-1

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் அஜித் தன்னுடைய மனைவி ஷாலினிவுடன்  எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது தமிழ் சினிமாவில் பிரபல ஜோடிகளில் ஒருவராக அஜித் மற்றும் ஷாலினி இருந்து வருகிறார்கள் இவர்களுக்கு கடந்த 2000ம் ஆண்டு பெற்றோர்கள் சம்மதத்துடன் நடைபெற்றது.

படப்பிடிப்பின் பொழுது அஜித்தால் நடிகை ஷாலினிக்கு காயம் ஏற்பட பிறகு அவரின் மீது அக்கரையாக அஜித் நடந்து கொண்டுள்ளார் அதன் பிறகு இவர்களுக்கிடையே காதல் ஏற்பட்டுள்ளது எனவே இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள் திருமணமாகி அனோஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் உள்ளனர்.

அஜித்தை ஷாலினி திருமணம் செய்து கொண்டதற்கு பிறகு அவர் ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை. இந்நிலையில் சமீபத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியான நிலையில் அதில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக பேச்சுவார்த்தை நடைபெற்றது ஆனால் அது அப்படி நடக்கவில்லை மேலும் அது வதந்தியென பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியானதற்கு பிறகு தெரிய வந்தது.

ajith

இந்நிலையில் திருமணம் ஆகிய 22 ஆண்டுகள் ஆகும் நிலையில் அதே காதலனுடன் அஜித், ஷாலினி ஜோடிகள் இருந்து வருகிறார்கள். மேலும் அவர்களுடைய புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் நடிகை ஷாலினிக்கு நேற்று பிறந்தநாள் என்பதால் அவ்வப்பொழுது எடுத்துக் கொண்ட புகைப்படம் தான் தற்பொழுது வெளியாகி உள்ளது.

AJITH SHALINI

அதில் ஷாலினி சோபாவில் அமர்ந்து கொண்டும் அதன் அருகில் அஜித் நின்ன படியும் போஸ் கொடுத்திருக்கிறார். பிறகு மற்றொரு புகைப்படத்தில் அஜித், ஷாலினி தன்னுடைய மகன் மற்றும் மகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படமும் வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தற்பொழுது நடிகர் அஜித் துணிவு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் பொங்கலை முன்னிட்டு பெரியார்களில் வெளியாக இருக்கிறது.