தென்னிந்திய சினிமா உலகில் தற்போது பிரபலமடைந்த நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் ஸ்ரத்தா ஸ்ரீநாத். இவர் தமிழில் கௌதம் கார்த்தி நடிப்பில் வெளிவந்த இவன் தந்திரம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார் முதல் படத்திலேயே தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியது மூலம் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்த பட வாய்ப்பினைப் பெற்றார்.
அந்த வகையில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த விக்ரம் வேதா படத்திலும், கார்த்தி நடிப்பில் வெளிவந்த காற்று வெளியிடை படத்திலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இதன் மூலம் தமிழ் சினிமாவில் குறுகிய காலத்திலேயே வளரத் தொடங்கினார். மேலும் பிரபலம் அடையும் வகையில் சமூக அக்கறை உள்ள படமான நேர்கொண்டபார்வை படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்து மேலும் பிரபலமடைந்தார் ஸ்ரத்தா ஸ்ரீநாத்.
அஜித் உடன் இணைந்து நடித்த தான் காரணமாக அவர் இந்தியா முழுவதும் பிரபலம் அடைந்தார் அதன் விளைவாக தற்போது அவர் கன்னடம் ,தமிழ், மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலும் பட வாய்ப்பை கைப்பற்றி நடித்து வருகிறார்.இந்த நிலையில் ஸ்ரத்தா ஸ்ரீநாத் பைக் ஓட்ட தெரியாமல் கீழே விழுந்த வீடியோவை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் அதில் அவர் கூறியது கடந்த 2017 ஆம் ஆண்டு நந்தி ஹில்ஸில் நடைபெற்ற ஷூட்டிங்கில் போல்டான கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்பதால் புல்லட் ஓட்ட தெரியுமா என கேட்டனர்.
#sharddhasrinath #actress pic.twitter.com/3hH7ybFd2z
— Tamil360Newz (@tamil360newz) June 25, 2020
அதற்கு நான் தெரியாது என்று கூறினேன் அதற்கு அவர்கள் கற்றுக் கொடுத்தனர் அதன்பின் நான் பைக் ஓட்டும் பொழுது கீழே விழுந்தேன் அப்பொழுது சுற்றியிருந்தவர்கள் என்னை கவனிக்காமல் பைக்கு ஏதாவது டேமேஜ் ஆகி உள்ளதாக பார்த்தனர். ராயல் என்ஃபீல்ட் இவ்வளவு வைட்டா இருக்கும்னு எனக்கே தெரியாது பதிவிட்டார். இதைப்பார்த்த கோமாளி நடிகை சம்யுக்தா சூப்பர் என கமெண்ட் அடித்துயுள்ளார்.