தல அஜித் சமீப காலமாக தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வருவதால் மென்மேலும் உச்சியை நோக்கி பயணித்து வருகிறார். சினிமா நேரம் போக தனது குடும்பத்துடன் பொழுதை சிறப்பாக கழித்து வருகிறார்.
மேலும் சினிமா பிரபலங்கள் விசேஷ நிகழ்ச்சிகளுக்கும் தனது மனைவியுடன் கலந்து கொள்வது வழக்கம். அந்த வகையில் பல பிரபலங்களின் திருமண நிகழ்ச்சி மற்றும் விசேஷ வீட்டு நிகழ்ச்சியில் தலை காட்டி உள்ளார் அதுபோல சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு அஜித் தனது மனைவியுடன் பல நிகழ்ச்சிகளில் கலந்து உள்ளார்.
அதில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் அஜித், ஷாலினி, திரிஷா, சிம்பு போன்ற பல நட்சத்திர பட்டாளங்கள் இருக்கின்றனர்
அது வேற எதுவும் இல்லை சிம்பு பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் தான். அப்போது சிம்பு கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தின் போது கொண்டாடப்பட்ட நிகழ்ச்சி போல தெரிகிறது.
வின்னை தாண்டி வருவாயா திரைப்படத்தில் தான் சிம்புவுடன் திரிஷா நடித்திருந்தார் அதனால் அந்த படத்தின் போதுதான் இந்த பிறந்தநாள் கொண்டாட்டம் நடந்திருக்கும் என அடித்து கூறப்படுகிறது. இதோ புகைப்படம்.