தமிழ் சினிமாவில் இன்று தவிர்க்க முடியாத ஒரு உச்ச நட்சத்திரம் நடிகர் அஜித்குமார் இவர் சமீபகாலமாக நல்ல நல்ல படங்களை கொடுத்து வருகிறார் அந்த வகையில் துணிவு படத்தின் வெற்றியை தொடர்ந்து அஜித் நடிக்க உள்ள திரைப்படம் ஏகே 62 இந்த படத்தை லைகா நிறுவனம் மிகப் பிரமாண்ட பொருள் செலவில் தயாரிக்க உள்ளது. மகிழ் திருமேனி இயக்கயுள்ளார்.
படம் முழுக்க முழுக்க ஆக்சன் நிறைந்த படமாக இருக்கும் என தெரிய வருகிறது. இந்த படத்திருக்கான அறிவிப்பு மே 1ஆம் தேதி வெளிவந்து உடனேயே சூட்டிங் தொடங்கப்படும் என தெரிய வருகிறது. இப்படி இருக்கின்ற நிலையில் அஜித் ஒரு பெண்ணுக்கு உதவியது. இணையதள பக்கத்தில் காட்டு தீ போல பரவி வருகிறது.
நடிகர் அஜித்குமார் அண்மையில் ஏகே 62 படத்திற்காக லண்டன் சென்றார். அப்பொழுது விமான நிலையத்தில் அஜித் ஒரு பெண்ணிற்கு உதவி செய்துள்ளார் அது மீடியாவில் பெரிய அளவில் வைரலாகி வருகிறேது. காரணம் அந்த பெண்ணின் கணவர் என கூறப்படுகிறது. அவர் இன்ஸ்டா பக்கத்தில் அஜித்தின் தங்கமான மனசை பாராட்டிய அவர் பதிவிட்டுள்ளது வைரலாகி வருகிறது அதில் அவர் கூறியது என் மனைவி பத்து மாத குழந்தை உடன் கிளாஸ்கோவில் இருந்து சென்னைக்கு பயணம் மேற்கொண்டார் தனியாக வந்த அவர் லண்டனில் உள்ள ஹீத்ரு விமான நிலையத்தில் அஜித்தை சந்தித்தும் அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
அப்பொழுது என் மனைவி கை குழந்தையை வைத்துக்கொண்டு லக்கேஜை சுமந்து வந்ததை பார்த்த அஜித் அவரது லக்கேஜையும் தான் எடுத்து வருவதாக கூறி உதவி உள்ளார் என் மனைவி வேண்டாம் என சொல்லியும் இருக்கட்டுமா எனக்கும் இரண்டு குழந்தைங்க இருக்காங்க அதனால் உங்களுடைய சூழ்நிலை என்னால் உணர முடிகிறது எனக் கூறிய எடுத்து வந்தாராம்..
அதோடு மட்டுமல்லாமல் அந்த லக்கேஜ் என் மனைவி இருக்கையில் மேல் வைக்கப்பட்டதா என்பதை உறுதி செய்த பின்னர் தான் அஜித் அங்கிருந்து சென்றாராம் அஜித்துடன் வந்த நபர் தலைவா நான் எடுத்து வரேன் என கேட்டாராம். அதை மறுத்து விட்டார் ஏ கே மிகப்பெரிய ஆளுமை கொண்ட ஒரு நட்சத்திரம் இப்படி நடந்து கொண்டது தன்னை வியக்க வைத்தது என அந்த பெண்ணின் கணவர் சொல்லி உள்ளார்.