Jason sanjay : சினிமா உலகில் வாரிசு நடிகர், நடிகை, இயக்குனர் வருவது சகஜம் அந்த வகையில் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய். முதலில் விஜய் உடன் நடனமாடி அறிமுகமானார் அதன் பிறகு அதிகம் எதிர்பார்க்கப்பட்டது ஆனால் அவர் தென்படவில்லை மாறாக அவர் படிப்பில் அதிகம் கவனம் செலுத்தினார்.
தொடர்ந்து வெளிநாட்டில் படித்து வந்த இவர் தற்பொழுது குறும்படங்களை இயக்கியும், நடித்தும் வந்தார். தமிழில் முதலில் அப்பாவை வைத்து அவர் படம் பண்ணுவார் என என பலரும் எதிர்பார்த்த இருந்த நிலையில் அவரோ வேறு ஒரு ஹீரோவை வைத்துதான் படம் பண்ணுவார் என பலரும் கூறினார்.
மேலும் யார் தயாரிப்பாளர் படம் இயக்கப் போகிறார் என்ற எதிர்பர்ப்பும் அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில் தற்போது அதற்கான தகவலும் அதிகாரப்பூர்வமாக வெளியானது லைகா நிறுவனம் தயாரிப்பில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் படம் பண்ண இருக்கிறார் ஹீரோ யார் என்று இதுவரை முடிவு செய்யப்படவில்லை.
இருப்பினும் இந்த தகவல் இணையதள பக்கங்களில் வைரலானது இதனை அடுத்து திரைப் பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து சொல்லி வருகின்றனர் அந்த வகையில் நடிகர் அஜித்தும் அவருக்கு போனில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார் என கூறப்படுகிறது.
விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் அஜித்தின் தீவிர ரசிகர் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான் ஏன் தளபதி கூட பல பேட்டிகளில் என்னுடைய மகன் அஜித்தின் தீவிர ரசிகர் என சொல்லி இருக்கிறார். இப்படி இருக்கும் பட்சத்தில் வருகின்ற நாட்களில் நிச்சயம் ஜேசன் சஞ்சய் நடிகர் அஜித்தை வைத்து படம் பண்ண அதிக வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது.