தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் நடிகர் அஜித் இவர் தற்போது துணிவு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இதனை தொடர்ந்து ஃபர்ஸ்ட் சிங்கள் பாடல் விரைவில் வெளியாகும் என ஹெச் வினோத் அவர்கள் தெரிவித்து இருந்தார் இதனை தொடர்ந்து படம் எப்போது வெளியாகும் என காத்திருந்த ரசிகர்களுக்கு படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாக உள்ளது.
அதே தினத்தில் விஜயின் வாரிசு திரைப்படம் வெளியாக உள்ளதால் ரசிகர் மதியம் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அது மட்டுமல்லாமல் விஜயின் வாரிசு திரைப்படமும் அஜித்தின் துணிவு திரைப்படமும் பொங்கலில் வெளியாக உள்ளதால் இந்த இரண்டு திரைப்படத்தில் எந்த படம் வெற்றி அடையும் என குழப்பத்தில் உள்ளனர்.
இந்த நிலையில் நடிகர் அஜித் குமார் அவர்கள் படப்பிடிப்பு தளத்தில் சென்னையில் இருக்கும் போது அவருடைய ரசிகர்கள் பலர் சூட்டிங் ஸ்பாட்டில் இருந்த சுவரின் மேல் ஏறி அவரைப் பார்த்து காத்திருக்கிறார்கள் அதைப் பார்த்த அஜித்குமார் எதுவும் சொல்லாமல் வீட்டிற்கு கிளம்பி சென்று இருக்கிறார் இதுபோல ஐந்து நாட்களும் ரசிகர்கள் சூட்டிங் ஸ்பாட்டிருக்கு சென்று அஜித்தை கண்டு வந்துள்ளனர்.
அதில் ஒரு ரசிகர் தனது நண்பர் ஒருவரை அதாவது ஊனமுற்றவரை தனது நண்பரை அழைத்து சென்று இருக்கிறார் அவரும் அந்த ஐந்து நாட்களாக அஜித் பின்னாடியே சென்று இருக்கிறார் இப்படி வருவதும் போவதுமாக இருந்த அந்த ரசிகரை பார்த்த அஜித் அவர்கள் அந்த ரசிகரை கூப்பிட்டு இருக்கிறார்.
இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத அந்த ரசிகர் பதற்றத்தோடு இருந்த ரசிகர் அஜித்குமார் இடம் சென்று இருக்கிறார் அப்போது அஜித் அவர்கள் அந்த ரசிகரின் தொழில் கையை போட்டு நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று கேட்டிருக்கிறார் அப்போது அந்த ஊனமுற்ற ரசிகர் நான் தற்போது படித்துக் கொண்டிருக்கிறேன் என்று கூறுகிறார்.
அதன் பிறகு அஜித்குமார் அவரிடம் சாதுவாக பேசி இருக்கிறார் அதாவது படித்துக் கொண்டிருக்கும் போதே இப்படி செய்வது தவறு சுவரு மேல் ஏறுவது பின் தொடர்ந்து வருவது இதெல்லாம் தவறான செயல் என்று எடுத்துக் கூறியிருக்கிறார் அது மட்டுமல்லாமல் சுவர் மீது ஏறி விபத்துக்கு உள்ளானால் என்ன செய்வீர் இதையெல்லாம் பார்க்கையில் எனக்கு பயமாக இருக்கிறது என்று அந்த ரசிகரிடம் அறிவுரை சொல்லி இருக்கிறார். இந்த தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.