பிரபல இயக்குனருக்கு போன் செய்து அடுத்த படத்தில் இணையலாமா என்று கேட்ட அஜித்.? இணையதளத்தில் வேகமெடுக்கும் செய்தி.

ajith
ajith

சினிமா உலகில் தொடர் வெற்றிகளை சமீபகாலமாக கொடுத்து மக்கள் மத்தியில் மீண்டும் தனது பெயரை நிலை நாட்டியுள்ளார் அஜித். இவருக்கு கோடான கோடி ரசிகர்கள் இருந்தாலும் பெருமளவு குடும்பங்களையும், பெண் ரசிகர்களை கவரவில்லை என்ற ஒரு குற்றச்சாட்டு இருந்தது அதை சரியாக புரிந்து கொண்ட அஜித் சமீபகாலமாக கிராமத்தில் மற்றும் சமூக அக்கரை உள்ள படங்களை கொடுத்து.

‘மீண்டும் தான் யார் என்பதை காட்டி வருகிறார் இப்பொழுது கூட இவர் ஹச். வினோத்துடன் கைகோர்த்து “வலிமை” என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது அதற்கு முன்பாக இந்த படத்தில் இருந்து சில அப்டேட்டுகள் வெளிவந்து கொண்டே இருப்பதால் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.

அஜித் அடுத்தாக எந்த இயக்குனருடன் கைகோர்ப்பார் பார்த்து இருந்தோம் ஆனால் அதற்கு முன்பாக சிறிது ஓய்வு என்கின்ற பெயரில் பைக்கில் இந்தியாவை சுற்றி வலம் வந்து கொண்டிருந்தார் தற்போது ஒரு வழியாக அதை முடித்துவிட்டு தல அஜித் அடுத்த படத்திற்கு ரெடியாகி உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

வினோத் மற்றும் பல்வேறு இயக்குனர்களிடம் அடுத்த கதை கேட்டு இருந்தாலும் யாருடன் இணைய போகிறார் என்பதே கேள்விக்குறியாக இருந்து வந்துள்ளது இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் அஜீத் சிறுத்தை சிவாவுக்கு போன் செய்து ஒரு ஆச்சரியத்தை கொடுத்துள்ளார் அந்த தகவலை தற்போது இணைய தள பக்கத்தில் தீயாய் பரவி வருகிறது.

அஜித் சிறுத்தை சிவாவுக்கு போன் செய்து உள்ளார் அவர் பேசியது : இருவரும் சேர்ந்து படம் செய்யலாமா என்று சிவாவிடம் அஜித் கூறியதாக தெரிய வருகிறது நான் தயாராக இருக்கிறேன். நீங்கள் தயாரா.. என்று அஜித் கேட்டுள்ளாராம்.