தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் அஜித் பொதுவாக நடிப்பதையும் தாண்டி மற்றவர்களுக்கு உதவும் குணம் உடையவர் என பலருக்கும் தெரிந்த உண்மைதான். பொதுவாக அஜித் பப்ளிசிட்டியை விரும்ப மாட்டார் எனவே இவர் உதவி செய்திருக்கிறார் என்பது ஒரு சிலரின் மூலமாகத்தான் தெரிய வருகிறது.
அந்த வகையில் அஜித்தின் வீட்டில் வேலை செய்யும் பணி பெண்கள் கூறி இருக்கும் தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது நடிகர் அஜித்தின் தந்தை சுப்பிரமணியம் இன்று காலமான நிலையில் அவருக்கு இறுதி சடங்குகள் நடைபெற்று முடிந்து தற்பொழுது பெசன்ட் நகர் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இந்நிலையில் அஜித்தின் தந்தை சுப்பிரமணியம் உடல் நலக்குறைவால் சில ஆண்டுகளாக இருந்து வந்த நிலையில் கடந்த நான்கு வருடங்களாக பக்க வாதமும் ஏற்பட்டுள்ளது எனவே படுத்த படுக்கையாக இருந்த நிலையில் தொடர்ந்து மருத்துவரின் கண்காணிப்பில் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் 85 வயதாகும் அஜித்தின் தந்தை சுப்ரமணியம் இன்று அதிகாலை 4:30 மணி அளவில் தூக்கத்திலேயே உயிர் நீத்தார். இந்த தகவல் திரை உலகினர், பிரபலங்கள் என அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. எனவே பலரும் நேரில் சந்தித்தும், சமூக வலைதள வாயிலாகவும் அஜித்துக்கு ஆறுதலை கூறி வருகிறார்கள்.
அந்த வகையில் சிவா, ஏ.எல் விஜய், பிரசன்னா, விஜய், மகிழ்திருமேனி உன்கிட்ட ஏராளமான பிரபலங்கள் அஜித்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியிருந்த நிலையில் சமீபத்தில் அஜித்தின் வீட்டில் வேலை செய்து வரும் பணிப்பெண்கள் பேட்டியளித்திருக்கும் தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
அதாவது நடிகர் அஜித் நல்லா இருக்க வேண்டும் அவருடைய குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் அவர் செய்த உதவிகளை நான் சாகுற வரையும் மறக்க மாட்டேன் என கூறிய நிலையில் பிறகு வீட்டில் வேலை செய்யும் டிரைவர்கள் மற்றும் மற்ற வேலை செய்யும் 12 பேருக்கு வீடு கட்டி தந்துள்ளதாக கூறினார். மேலும் அந்த வீடுகளில் இரண்டு பெட்ரூம், ஹால், கிச்சன், பாத்ரூம் என அனைத்து வசதிகளும் இருப்பதாகவும் அவர்கள் கூறிய நிலையில் இது குறித்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாக அஜித்தை பாராட்டி வருகின்றனர்.