நடிகர் அஜித்குமார் தமிழ் சினிமா உலகில் ஆரம்பத்தில் பல தோல்வி படங்களை கொடுத்து இருந்தாலும் அண்மை காலமாக சிறந்த இயக்குனர்களுடன் கைகோர்த்து தொடர் வெற்றி படங்களை கொடுத்து அசத்து வருகிறார். அந்த வகையில் வலிமை படத்தின் வெற்றியை தொடர்ந்து இப்பொழுது தனது 61வது திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.
இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு பாங்காக் சென்று இருக்கிறது இந்த படத்தை எச். வினோத் இயக்குகிறார். போனி கபூர் மிக பிரமாண்ட பொருள் செலவில் படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தில் அஜித்துடன் கைகோர்த்து மலையாள நடிகை மஞ்சு வாரியர், இளம் நடிகர் வீரா, சமுத்திரக்கனி, யோகி பாபு, மகாநதி சங்கர், அஜய் மற்றும் பல முன்னணி நட்சத்திர பட்டாள்கள் நடித்து வருகின்றனர்.
இந்த படம் முழுக்க முழுக்க பேங்க் ராபரியை மையமாக வைத்து எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது அதே சமயம் இந்த படத்தில் சில சமூக அக்கறை உள்ள கருத்துக்களும் இடம்பெறும் என தெரிய வருகிறது. மேலும் இந்த படத்தில் ஆக்சன் மற்றும் செண்டிமெண்ட்க்கு பஞ்சம் இருக்காது என தெரிய வருகிறது.
இது இப்படி இருக்க அஜித் பற்றிய செய்தி ஒன்று இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் அஜித்குமார் லண்டன்னில் மிக விலை உயர்ந்த வீடு ஒன்றை வாங்கி இருக்கிறாராம் அந்த வீட்டின் மதிப்பு மட்டுமே சுமார் 100 கோடிக்கு மேல் இருக்கும் என தகவல்கள் வெளி வருகின்றன.
ஏற்கனவே சென்னை மற்றும் பல இடங்களில் வீடு வாங்கி வைத்திருக்கும் அஜித் தற்பொழுது லண்டனில் வீடு வாங்கி உள்ளது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. இந்த தகவல் தற்போது இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.