தமிழ் சினிமாவில் அஜித், விஜய் இருவரும் இரண்டு துருவங்களாக இருந்து வருகிறார்கள். அதேபோல் அஜித் திரைப்படத்தை வெளியிட்டால் அஜித் ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடுவார்கள். அதேபோல் விஜய் திரைப்படம் வெளியானால் விஜய் ரசிகர்கள் பிரமாண்டமாக கொண்டாட வருவார்கள்.
திரையில் இவர்களுக்குள் போட்டிகள் இருந்தாலும் நிஜத்தில் நல்ல நண்பர்கள் என பல சினிமா பிரபலங்கள் கூறியுள்ளார்கள். மேலும் இவர்கள் இருவரின் திரைப்படமும் மாறி மாறி தங்களின் வசூல் சாதனையை முறியடித்து கொள்ளும். ஆனால் இந்த முறை இந்த வருடத்தில் வெளியாகிய வலிமை மற்றும் பீஸ்ட் திரைப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றது.
சமீபத்தில் வெளியாகிய விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் இன்னும் திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது இந்த நிலையில் வருகிற மே 1ம் தேதி உழைப்பாளர் தினம் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் அதேபோல் அன்றுதான் அஜித் பிறந்தநாள். அஜித்தின் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக அஜித் நடித்த வலிமை திரைப்படத்தை வருகின்ற மே 1ம் தேதி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப இருக்கிறார்கள்.
வலிமை திரைப்படம் போனிகபூர் தயாரித்திருந்தார் வினோத் அவர்கள் இயக்கியிருந்தார் சமீபத்தில் ott யில் இணையதளத்தில் வெளியாகிய திரைப்படம் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஆறு முப்பது மணிக்கு வெளியிட இருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வலிமை திரைப்படத்தை ஒளிபரப்பினால் டிஆர்பி ரேட்டிங் எகிறும் என தெரிந்துகொண்டு சன் தொலைக்காட்சி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தை ஒளிபரப்ப இருக்கிறார்கள் இந்த இரண்டு திரைப்படங்களும் ஒரே நேரத்தில் ஒளிபரப்ப போவதால் டிஆர்பி யில் யார் அதிக பார்வையாளர்களை தரப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
அஜித்-விஜய் இருவருக்கிடையே போட்டியாக இருந்தாலும் தற்பொழுது தொலைக்காட்சிகளுக்கு இடையே பலத்த போட்டி இந்த திரைப்படத்தின் மூலம் ஏற்பட்டுள்ளது.